மேலும் அறிய

CM on Paddy: நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு

2025-26 கொள்முதல் பருவத்தில், வரும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து நெல் கொள்முதலை தொடங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

2025-26 கொள்முதல் பருவத்தில் 1.9.2025 முதல் நெல் கொள்முதல் தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாக, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் அறிக்கை

இது குறித்து உணவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் 1.9.2025 முதல் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2545 மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2500 என்ற விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று ஆணையிட்டுள்ளார்கள்.  இதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றிற்குச் சன்னரகத்திற்கு ரூ.156 மற்றும் பொதுரகத்திற்கு ரூ.131 அடங்கும்.  திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லிற்கு ரூ.2500 வழங்குவோம் என்று குறிப்பிட்டதை நிறைவேற்றியுள்ளோம் என்பதைத் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு நம் முதல்வரின் பொற்கால ஆட்சியில் 29.08.2025 வரை 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் 51 மாத கால ஆட்சியில், இதுவரை மொத்தம் 2.15 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 44,777.83 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ.2,031.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதமே அக்டோபரில் தொடங்கும் பருவ விலையில் நெல் கொள்முதல் செய்திட முதலமைச்சர் அவர்கள், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்று, 2022-2023 ஆண்டு முதல் செப்டம்பரிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருவதுபோல், இந்த ஆண்டும் செப்டம்பர் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.

“ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது” என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதால், திறந்த வெளியில் வைக்காமல் இந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்புத் தளங்கள் கட்ட ஆணையிட்டார்கள்.  333 கோடியே 7 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 4  லட்சத்து 3 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 26 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ​25 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நெல் சேமிப்பு வளாகங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

2025 – 2026 ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட
20 நவீன சேமிப்பு வளாகங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 49 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 நவீன சேமிப்பு வளாகங்கள் என ஆக மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 26 நவீன சேமிப்பு வளாகங்கள், 469 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றைக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

​ஆக மொத்தம், இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை, விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி ரூ.827  கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில், 7 லட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 57 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், வருங்காலங்களில் திறந்த வெளியில் நெல்லைச் சேமிக்க வேண்டிய தேவை எழாது.  இந்த ஆண்டு நெல்வரத்து அதிகமாக வரலாறு காணாத வகையிலிருந்தாலும், எதிர்பாராது அடிக்கடி மழை பெய்தபோதும், நெல்மணிகள் மழையில் நனையாமல் காப்பாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, வருகின்ற 2025-26 பருவத்தில் நெல் கொள்முதலை செப்டம்பர் முதல் நாளிலிருந்து தொடங்கிட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 
நெல் கொள்முதல் மையங்களிலிருந்து நேரடியாக அரிசி அரவை ஆலைகளுக்கு நெல்லை அனுப்பிடவும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அனைத்து நெல் விவசாயிகளும் புதிய விலையில் நெல்லினை விற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் சக்கரபாணி அவரது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளா.

 

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget