(Source: ECI/ABP News/ABP Majha)
Tamil Nadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 607 பேருக்கு கொரோனா தொற்று;8 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 607 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 1,03,938 பேருக்கு புதிதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று புதிதாக 607 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் சென்னையில் இன்று புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டில் 56 பேருக்கும் அதிகப்படியாக இன்று புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 689 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 23 Dec 2021
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 23, 2021
Today/Total - 607 / 27,42,224
Active Cases - 6,889
Discharged Today/Total - 689 / 26,98,628
Death Today/Total - 8 / 36,707
Samples Tested Today/Total - 1,03,938 / 5,66,22,301***
Test Positivity Rate (TPR) - 0.6%#TNCoronaUpdate #TN pic.twitter.com/RGWDpQqfeC
மாவட்ட வாரியாக கொரோனா இன்றைய தொற்று விவரங்கள்:
#TamilNadu | #COVID19 | 23 Dec 2021
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 23, 2021
District Wise Data...#TNCoronaUpdates #coronavirus pic.twitter.com/CCUKmMeH7s
தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவமனை படுக்கைகள் தொடர்பான விவரம்:
#BedsforTN#COVID19 Bed Vacancy Details In CHC / CDH / CCC as On (23.12.2021)#TamilNadu #TNCoronaUpdate pic.twitter.com/caf2bzXx2h
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 23, 2021
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 17 வயதில் ரூ.3 கோடி கல்வி உதவித்தொகை: விவசாயி மகளுக்கு சாத்தியமானது எப்படி?