மேலும் அறிய

TN Corona new Guidelines: தியேட்டருக்கு இதான் ரூல்.. சினிமா ரசிகர்களுக்கு சோக செய்திதான்! தமிழக அரசின் அறிவிப்பு

பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சில கட்டுப்பாடுகள் வழக்கம்போலவே தொடர்கின்றன.

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சில கட்டுப்பாடுகள் வழக்கம்போலவே தொடர்கின்றன.  அதில் முக்கியமானது, தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகளிலும் 50% நபர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50% இருக்கையால் பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதே உத்தரவு தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 100 ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள், புதிய திரைப்படங்களை கொண்டாடலாம் என நினைத்திருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்

TN Corona new Guidelines: தியேட்டருக்கு இதான் ரூல்.. சினிமா ரசிகர்களுக்கு சோக செய்திதான்! தமிழக அரசின் அறிவிப்பு

மேலும் சில அறிவிப்புகள்:

உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

 இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சி கூடங்கள். விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

12. அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

TN Corona new Guidelines: தியேட்டருக்கு இதான் ரூல்.. சினிமா ரசிகர்களுக்கு சோக செய்திதான்! தமிழக அரசின் அறிவிப்பு

முன்னதாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்

தமிழ்நாட்டில் கொரோளா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 7ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையால் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாண்புமிகு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திருமா சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையினால் கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதாகவும், போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பினும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம். மாணவ மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாக, பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன

தற்போது நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1-2-2022 முதல் 15-2-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget