தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

ஒரே நாளில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 723 பேருக்கு புதிதாக கொரோனா பதிவாகி உள்ளது, இதில் 6533 ஆண்கள் மற்றும் 4190 பெண்கள் அடங்குவர்.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 723 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது, இதில் 6533 ஆண்கள் மற்றும் 4190 பெணகள் அடங்குவர். தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் அளவு 3000-ஐக் கடந்துள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் 3304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 16 பேர் பலியான நிலையில் தமிழகம் முழுதும் 42 பேர் இறந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை 25 ஆயிரத்து 11 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் தவிர இன்று உயிரிழந்த 42 பேரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் அலையில் வேகமெடுத்துள்ள கொரோனா பரவல் ஒருபுறம் இருக்க தடுப்பூசி வழங்கும் பணியும் நடந்து வருகின்றது. தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

இந்நிலையில் மருத்துவக்குழுவின் ஆலோசனைப்படி வரும் 20-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகின்றது. மேலும் ஞாயிற்று கிழமைகளில் முழுநேர ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Corona Corona update TN Corona update Covid 19 Update Corona Deaths

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

TN Corona Update: தமிழ்நாட்டில் 16,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று, 374 பேர் உயிரிழப்பு..!

TN Corona Update: தமிழ்நாட்டில் 16,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று, 374 பேர் உயிரிழப்பு..!

Perarivaalan : ’அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ - கமல்ஹாசன் கேள்வி

Perarivaalan : ’அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ - கமல்ஹாசன் கேள்வி

DMK Vs BJP : ’டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டத்தில் திமுக - பாஜக’

DMK Vs BJP : ’டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டத்தில் திமுக - பாஜக’

டாப் நியூஸ்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!