திருமா வைத்த 2 கோரிக்கை.! உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்
Stalin-Thirumavalavan: நாம் நடத்தி வருவது மொழிக்கு எதிரான போர் அல்ல, பண்பாட்டை காப்பதற்கான போர்; எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் திமுக போராடி வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் , சம்ஸ்கிருதத்தை திணிக்கலாமா என மத்திய அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் , சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது, “ மொழிப் போராட்டத்தின் மையமா திமுக இருந்தது. தமிழை காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு எனது வீர வணக்கம். இந்தியை அல்ல, எத்தனை மொழிகளை திணித்தாலும் நம் தமிழ் அழிந்துவிடாது.
ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் - தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தேன்.
மொழிப்போரில் முதல் தியாகிகளாக இருக்க கூடிய தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன், இரண்டு கோரிக்கைகளை வைத்தார். இருவரின் திருவுருவச் சிலையை , தமிழ்நாடு அரசு விரைவில் நிறுவ இருக்கிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் - தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தேன்.
— M.K.Stalin (@mkstalin) January 25, 2025
அதுமட்டுமல்ல, சகோதரர் @ThirumaOfficial அவர்களின் கோரிக்கையினை ஏற்று, எழும்பூரில்… pic.twitter.com/llyj8jqfcT
முதல்வர் ஸ்டாலின்





















