மேலும் அறிய

பாரதியின் வரிகள் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியவை - முதல்வர் ஸ்டாலின்

பாரதியாரின் வரிகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியவை- முதல்வர் ஸ்டாலின்

வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பாரதி சுடரை ஏற்றி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பாரதியார் மறைந்தாலும், அவரது கவிதை வரிகள் மறையாது. மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். அத்தைகைய வலிமை பாரதியின் படைப்புகளுக்கு உண்டு. அச்சம் தவிர், உடலினை உறுதி செய், ஏறுபோல் நட, கொடுமையை எதிர்த்து நில், தெய்வம் நீ என்று உணர் - என்ற அவரின் புதிய ஆத்திச்சூடி வரிகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியவை.

அதனால் தான், பாரதியை 'மக்கள் கவிஞர்' என்று அறிஞர் அண்ணா 1947-ஆம் ஆண்டில் மகுடம் சூட்டி எழுதினார். நாட்டுக்கு கேடு தரும் பாதையை அனைத்தையும் விரட்டி, புதிய சமூகத்தை அமைக்கும் பாரதியின் பாதையை போற்றுவோம் என்று அண்ணா எழுதினார். எட்டயப்புரத்தில் வாழ்ந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி நினைவில்லமாக அறிவித்து பெருமை சேர்த்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. 1973-ல் பாரதியின் இல்லத்தை வரலாற்று சின்னமாக அறிவித்து திறந்து வைத்தார் தலைவர்  கருணாநிதி" என்று தெரிவித்தரர்.                

முன்னதாக, மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.

  1. பாரதியார் நினைவு நாளான செப்.11-ம் தேதி ஆண்டுதோறும் அரசு சார்பில் ‘மகாகவி நாளாக’கடைபிடிக்கப்படும். இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி, ஒரு மாணவர், மாணவிக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் ‘பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும்.
  2. பாரதியாரின் தேர்வு செய்யப்பட்ட பாடல்கள், கட்டுரைகளை தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 37 லட்சம் பேருக்கு ரூ.10 லட்சம் செலவில் வழங்கப்படும்.
  3. பாரதியாரின் வாழ்க்கை, படைப்புகள் குறித்து குறிப்பிடத்தக்க ஆய்வுகள் மேற்கொண்ட, மறைந்த பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் நினைவாகஅவர்களது குடும்பத்தினருக்கும், மூத்த ஆய்வாளர் சீனி.விசுவநாதனுக்கும், பேராசிரியர் ய.மணிகண்டனுக்கும் தலா ரூ.3லட்சம், விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.
  4. பாரதி உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப் பொருட்களை பூம்புகார் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்கப்படும்.
  5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடி தொகுக்கப்பட்டு, வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம், சித்திரக்கதை நூலும்,பாரதியாரின் சிறந்த 100 பாடல்களை தேர்வு செய்து தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் ஒரு நூலும் வெளியிடப்படும். பாரதியாரின் படைப்புகள், அவரைப் பற்றிய முக்கிய ஆய்வு நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
  6. பாரதியாரின் நூல்கள், அவரைப்பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து எட்டயபுரம், திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்கள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் அமையும் கலைஞர் நினைவு நூலகத்தில் வைக்க, ‘பாரதியியல்’ என்ற தனி பிரிவு ஏற்படுத்தப்படும்.
  7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும்.
  8. கொரோனா தொற்று முழுமையாக நீங்கிய பிறகு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘திரையில் பாரதி’ என்ற இசைக் கச்சேரி நடத்தப்படும். திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியின் பாடல்கள் மட்டுமே இதில் இடம்பெறும்.
  9. பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் செய்திதுறை சார்பில் வாரம்தோறும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும்.
  10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.
  11. உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.
  12. பாரதியார் படைப்புகளை குறும்படம், நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி, நவீன ஊடகங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
  13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளை பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும், வரைந்தும் பரப்பப்படும்.
  14. பெண் கல்வி, பெண்களிடம் துணிச்சலை வலியுறுத்தியவர் பாரதி. ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்த உள்ள மகளிர்சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ என்று பெயர் சூட்டப்படும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget