Minister Ponmudi Speech: பாலிடெக்னிக்கில் வருகிறது 5 புதிய பாடப்பிரிவுகள்.. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, “ பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்” என தெரிவித்து இருக்கிறார். இன்றைய காலக்கட்டத்துக்கும், தேவைக்கும் ஏற்ப புதிய பாடப்பிரிவுகளை கொண்டுவரவுள்ளதாக அவர் தெரிவித்தார்
மேலும் அவர் அறிவித்த அறிவிப்புகள்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என்றார்.
16 கல்லூரிகளுக்கு 199.36 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.
26 பாலிடெக்னிக் கல்லூரிகள்,55 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
அழகப்பா பல்கலைகழகத்தில் கடல்சார் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நூலக கட்டடம் அமைக்கப்படும்.
View this post on Instagram
பாலிடெக்னிக் கல்லூரி முடித்த மாணவர்கள் நேரடியாக அண்ணாபல்கலை கழகத்தில் இராண்டாம் ஆண்டு சேர்ந்து கொள்ள முடியும்.
அண்ணாபல்கலை கழகத்தில் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்த, சிப்காட் மற்றும் டிக்கோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 11 ஆய்வு மையங்கள், தொழில் திறனை மேம்படுத்த ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்படும்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் அயல் நாட்டு மொழிகள் கற்பிக்கப்பட மையங்கள் உருவாக்கப்படும்.
மாநிலக்கல்லூரியில் முதுகலை வணிகவியல் படிப்பு தொடங்கப்படும்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலைக்கிடைக்க ஏதுவாக, ஆடை வடிவமைப்பு, ஆட்டோ மொபைல் பொறியியல், வேளாண் பொறியியல் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.