TN Assembly: தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ.5 லட்சம் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் நேற்று வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்றும் சட்டபேரவை விவாதம் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ.5 லட்சத்துடன் விருது வழங்கப்படும் என்றும், அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும், தமிழில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் போட்டிகள் நடத்த ரூ.16 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும், தொழில்துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் மாநில அளவில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும் என்றும் கிருஷ்ணகிரியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா 3000 ஏக்கர் பரப்பளவில் ரூ.1800 கோடியில் உருவாக்கப்படும் என்றும் சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்