மேலும் அறிய

ED Officer Arrested : 'வழக்கை முடித்து வைக்க லஞ்சம்' அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்த தமிழக போலீஸ்..?

''தமிழ்நாட்டில் திமுக நிர்வாகிகள் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரையே தமிழக போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இல்லங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சமீப நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழக போலீசார் கைது செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.ED Officer Arrested : 'வழக்கை முடித்து வைக்க லஞ்சம்' அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்த தமிழக போலீஸ்..?

திண்டுக்கல் மருத்துவர் ஒருவரிடம் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற முயன்றபோது தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அந்த அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

அமலாக்கத்துறை ஐ.டி.கார்டு

பிடிபட்ட நபர் அங்கிட் திவாரி என்றும் அவர் அமலாக்கத்துறையில் பணி செய்வது போன்று அடையாள அட்டை வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பிடிபட்ட அங்கிட் திவாரியை திண்டுக்கலில் உள்ள தனி இடத்தில் வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பணக்காரர்களை குறி வைத்து மிரட்டல்

இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கிட் திவாரி என்ற அதிகாரி அமலாக்கத்துறை ரேடாரில் உள்ள பணக்காரர்களை குறி வைத்து செயல்பட்டது.  அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லியும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளோரை தொடர்பு கொண்டு வழக்கை முடித்து தருவதாக பேரம் பேசியும் லட்ச கணக்கில் பலரிடம் பண பறித்தது தெரியவந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உஷாரான திண்டுக்கல் மருத்துவர்

திண்டுக்கலை சேர்ந்த மருத்துவரின் பணக்கார நண்பர்கள் சிலர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய முடிவு எடுத்திருக்கிறது என்றும் அப்படி செய்யாமல் இருக்க 50 லட்ச ரூபாய் முதல் கட்டமாக பணம் கொடுக்க வேண்டும் என்று தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறிய அங்கிட் திவாரி மிரட்டியிருக்கிறார். அவரது மிரட்டலுக்கு பயந்ததுபோல முதற்கட்டமாக 20 லட்சம் பணம் கொடுக்க ஒத்துக்கொண்ட மருத்துவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

டோல் பிளாசாவில் சுற்றி வளைத்த போலீஸ்

இந்நிலையில், திண்டுக்கலில் உள்ள தனியார் இடத்தில் அங்கிட் திவாரி மருத்துவரிடம் பணம் பெற்று திரும்பும்போது, மதுரை – திண்டுக்கல் சாலையில் உள்ள டோல்பிளாசில் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும்களவுமாக பிடித்துள்ளனர். அவரை மீண்டும் திண்டுக்கல் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

உண்மையிலேயே அமலாக்கத்துறை அதிகாரி

பிடிபட்டவர் மத்திய அரசின் அமலாக்கத்துறையில் பணிபுரியும் அதிகாரி என்று கூறியுள்ளதால், அவர் உண்மையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிதானா ? இல்லை போலியானவரா என்ற கோணத்திலும் தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் இதற்கு முன்னர் தான் நாக்பூரில் பணியாற்றியதாகவும் சில மாதங்களுக்கு முன்னரே தமிழக அலுவலகத்திற்கு பணியிட மாறுதலில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கைதா இல்லையா ? - விரைவில் விளக்கம்

விசாரணையில் முழு விவரம் கிடைத்த பின்னரே கைது செய்யப்பட்டுள்ளாரா ? இல்லையா என்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி திமுகவினருக்கு குடைச்சல் கொடுத்துவரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரையே தமிழக போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget