Tirupattur: திருப்பத்தூரில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம்.! கலெக்டருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.!
Tirupattur Flyover: நூற்றாண்டு பிரச்சினையை ஓரிரு ஆண்டுகளில் முடித்துள்ளதாக திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருப்பத்தூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட மேம்பால பணியை செய்தியாளர் பயணத்தின் மூலம் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் திருப்பத்தூர் சிங்காரப்பேட்டை சாலை முதல் தோரணபதி சாலை வரை இருந்த தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக 190 லட்சம் மதிப்பில் 40.68 மீட்டர் அளவில் புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு திட்டங்களை நேரடியாக மக்கள் அறியும் வகையில் செய்தியாளர் பயணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மேற்கொண்டு பாலத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதி மக்கள் பல வருடங்களாக நாங்கள் இந்த சாலையை கடந்து வருவதில் மிகவும் சிரமப்பட்டு இருந்தோம் பாலம் இல்லாத போது பள்ளி மாணவ மாணவிகள் ஐந்து கிலோமீட்டர் அளவில் சுத்தி வரும் நிலைமை இருந்தது.
மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் சென்ற பின்பு மழை வந்தால் பாலம் அமைக்கப்பட்ட ஜம்பு நதியில் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அப்போது பள்ளிக்கு சென்ற தங்களுடைய குழந்தைகளுக்கு தகவல் தெரிவித்து அவ்வழியாக வர வேண்டாம் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி வாருங்கள் என்று சொல்லும் நிலைமையும் இருந்து வந்தது.
ஆனால் இந்த பாலம் கட்டப்பட்டதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர்
சுமார் நூறாண்டு காலமாக பகுதி மக்கள் பாலம் இல்லாமல் அவதி உற்று வந்தனர் இந்த நிலையில் அவர்களுடைய பிரச்சனையை போக்கும் வகையில் நூறாண்டு பிரச்சினையை ஓரிரு ஆண்டுகளிலே திர்த்து வைத்துள்ளோம்.
மேலும் அரசு திட்டங்களை நேரடியாக மக்கள் அறியும் வகையில் இந்த செய்தியாளர் பயணம் மேற்கொண்டதாகவும் கலெக்டர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...