Tirupathur: அடேங்கப்பா! ஒருவழியா 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்ட திருப்பத்தூர் சிறுத்தை
சமீபகாலமாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் அதிகளவில் ஊருக்குள் வலம் வந்து உயிரினங்களை வேட்டையாடுவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் நேற்று மாலை 3மணி முதல் சிறுத்தை உலா வந்து கொண்டிருக்கிறது அதனை பிடிக்க திருப்பத்தூர் வனத்துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புத்தகரம் பகுதியில் சேர்ந்த கோபால் என்ற முதியவரை சிறுத்தை தாக்கியதின் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இதனால் சம்பவ இடத்திற்கு வேலூர் மாவட்ட வன அலுவலர் பத்மா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.மேலும் 50க்கும் மேற்பட்டோர் சிறுத்தை பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் சாமநகர் பகுதியில் உள்ள கார் செட்டில் சிறுத்தை பதுங்கிகொண்டது.இந்த கார் செட்டில் 5 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் சிறுத்தையை பார்த்ததும் காருக்குள் சென்று தங்களை பூட்டிக்கொண்டனர். இவர்களை பல மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து கார் செட்டில் பதிங்கி இருந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் 12 மணி நேரமாக வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.அதனைத் தொடர்ந்து ஓசூரில் இருந்து வந்த சுகுமார் தலைமையிலான மருததுவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பத்திரமாக மீட்டனர்.12 மணிநேர தொடர் முயற்சியின் காரணமாக வனத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையினர், அனைவரும் ஈடுபட்டு சிறுதையை பத்திரமாக மீட்டனர்.மேலும் தற்போது இந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதி விடுவதாக முதற்கட்டமாக தெரிவித்தனர். ஆனால் எந்த பகுதி என இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடப்பட்டது.
சமீபகாலமாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் அதிகளவில் ஊருக்குள் வலம் வந்து உயிரினங்களை வேட்டையாடுவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.