வெடித்த குக்கர்! தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்த லாரி.. ஜஸ்ட் மிஸ்சில் உயிர் தப்பிய ஓட்டுநர்
எதிர்பாராத விதமாக திடீரென குக்கர் வெடித்துள்ளது இதனால் காயமடைந்த சுரேஷ் லாரியின் முகப்பு பகுதியில் இருந்து கீழே குறித்து தப்பினார்.

தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் சமையல் செய்தபோது குக்கர் வெடித்துச் சிதறியதால், மிக்சிங் டாரஸ் லாரி (Mixing Taurus Truck) கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நெல்லூர் பகுதிக்கு தங்களுடைய சிமெண்ட் மிக்சிங் டாராஸ் லாரியை எடுத்துக்கொண்டு வேலைக்காக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேதண்டபட்டி அருகே லாரியை நிறுத்தி லாரியின் முகப்பு பகுதியில் கேஸ்அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென குக்கர் வெடித்துள்ளது இதனால் காயமடைந்த சுரேஷ் லாரியின் முகப்பு பகுதியில் இருந்து கீழே குறித்து தப்பினார்.
இதனால் உடனடியாக லாரி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது அப்போது திடீரென சிலிண்டரும் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையிலேயே சிறிது நேரம் டாராஸ் லாரி கொழுந்துவிட்டு எரிந்தது.இந்தச் சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மேலும் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் லாரி ஓட்டுனர் சுரேஷ் மற்றும் கிளீனர் கோகுல் ஆகியோரின் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். லாரியிலேயே அமர்ந்து சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக குக்கர் வெடித்து தேசிய நெடுஞ்சாலையில் லாரி கொழுந்து விட்டு எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.a






















