மேலும் அறிய

2000 Rupees Note: ”அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது” - நெல்லை போக்குவரத்து கழகம் அதிரடி..! மக்கள் அதிர்ச்சி..!

திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட அரசுப்பேருந்துகளில் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட அரசுப்பேருந்துகளில், பயணச்சீட்டுகளுக்காக பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது என மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

”2000 ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது”

திருநெல்வேலி போக்குவரத்து மண்டல பொதுமேலாளர், பயணிகளிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை நடத்துனர்கள் பெற வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,  "இந்திய ரிசர்வ் வங்கி 19.04.2023 தேதிய அறிக்கையில் ரூபாய் 2000 இந்திய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது. இருப்பினும் ரூபாய் 2000 இந்திய நோட்டுகள் சட்டபூர்வமான டெண்டராக இருக்கும், மேலும் 30 செப்டம்பர் 2023 தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000/- வரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுத்த இயலாத நிலை:

இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலை உள்ளதால், 23.05.2023 ஆம் தேதி முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்கும்படி தகுந்த அறிவுரை வழங்குமாறு பொது மேலாளர் மற்றும் அனைத்து கிளை மேலாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துனர்களால் செலுத்தப்பட்ட வசுல் தொகையில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவிற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறதுஎன குறிப்பிடப்பட்டுள்ளது.

”2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது”

நாடு முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.  

பணத்தை எப்படி மாற்றுவது?

2000 ரூபாய் நோட்டை வேறு நோட்டுகளாக மாற்றுவதில், தொடக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மே 23, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டை மற்ற பணத்துடன் மாற்றிக்கொள்ளலாம். இந்த நோட்டுகளை மாற்ற 20 ஆயிரம் ரூபாய் வரை வரம்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருவர், ஒரு நாளைக்கு, 10 நோட்டுகள் வரை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான், திருநெல்வேலி போக்குவரத்து கழகம் சார்பில், 2000 ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Embed widget