திமுக ஆட்சிக்கும், தவெக ஆட்சிக்கும் வித்தியாசமே இல்லை! – நைனார் நாகேந்திரன் சாடல்
தினம் தினம் படுகொலைகள்... முதல்வர் விஜய் என்ன செய்கிறார்? – திண்டிவனத்தில் பாஜக மாநிலத் தலைவர் கேள்வி

விழுப்புரம் : கடந்த திமுக ஆட்சிக்கும், தற்போது உள்ள தவெக காட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார். என்பது தான் பாஜகவின் கேள்வி. திண்டிவனத்தில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நைனார் மகேந்திரன்.
தவெக சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க முயற்சி குறித்த கேள்வி:
இது எந்த அளவுக்கு உண்மை உள்ளது எனக்கு தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர் காமராஜை கடத்திச் சென்று அந்த பொதுச் செயலாளர் கையெழுத்து போடப்பட்டது. தவெக அரசு என்ன செய்தது. தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் தவெக பக்கம் செல்கிறார்கள். இது குதிரை பேரமா, இல்லை இரண்டும் குதிரை பேரமா என்பதை இந்த நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். பழைய திமுக ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் இந்து வேறுபாடும் இல்லை.
போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 150-க்கும் மேற்பட்ட பாலியன் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 75க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளது. தினம், தினம் படுகொலைகள் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 17 பாலியல் வன்கொமைகள் சம்பவங்கள் நடைபெறுகிறது. நான் கேட்பதெல்லாம் முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் குதிரை பேரும் நடத்தி ஆட்சியை நடத்த நினைக்கும் நீங்கள். மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் பாஜகவின் கேள்வி.
கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்த கேள்விக்கு:
12 மணிக்கு வர வேண்டியவர் 7 மணிக்கு வந்தார். கரூர் சம்பவத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய்யும் ஒரு காரணமாக இருப்பார். சம்பவம் நடந்தவுடன் சென்னைக்கு ஓடிவிட்டார். ஒரு தலைவராக மக்களை காப்பாற்றி, நீதி கேட்டிருக்க வேண்டும்.
மதுரையில் ஆளுநர் ஆய்வு நடத்தி தொடர்பான கேள்விக்கு:
அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்தார். அன்றைக்கு ஆளுநரை தேடிச் சென்று மனு அளித்தார். ஆளும் கட்சி தயாரித்துக் கொடுத்த உரையை தான் ஆளுநர் படிக்க வேண்டும். ஆளுநர் தவெக எழுதிக் கொடுத்த உரையை அப்படியே வாசித்தார். எல்லா வகையிலும் ஆளுநர் ஒத்துப்போகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 167-படி ஆளுநர் மத்திய அரசின் நிறுவனம், அரசு நிறுவனங்களை ஆய்வு செய்ய முடியும் என்பது விதியில் உள்ளது. ஆளுநர் செல்லக்கூடாது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கஞ்சா விற்பனை, கொலை, சட்டம் ஒழுங்கு சரியில்லை இதை கேட்காமல் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை ஆளுநரை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இன்னும் பழைய போக்கை கடைபிடிக்காமல், 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மாற்றம் வந்துள்ளது. அரசியல்வாதிகள் மனதில் மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















