மேலும் அறிய

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகள் பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீர்வரத்தை முற்றிலும் தடுத்துவிட்டது. வட தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்து வருவதற்கு இந்த கர்நாடகா, ஆந்திரா அரசுகளின் தடுப்பணைகள்தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

"தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு , அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

விழாவில் கலந்துகொண்டு 484 பயனாளிகளுக்கு, 6 கோடியே 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அமைச்சர் துரைமுருகன், வறட்சி காலங்களில் வேளாண்மை மற்றும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறினார். வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்க தென்பண்ணை ஆற்றிலிருந்து படேதால்வாய் ஏரியிலிருந்து பர்கூர் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வரும் உபரி நீரை பாலாற்றில் கொண்டு வரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் ஏற்பட்டால் பாலாற்றில் 3 மாதம் தொடர்ந்து தண்ணீர் ஓடும்  நிலை ஏற்படும்.

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

மேலும் மழைக்காலங்களில் பாலாற்றில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க, அந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான, ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாய சங்கத்தினரிடமும் , பொதுமக்கள் இடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில பொதுச் செயலாளர் ஏ.சி.வெங்கடேசன் "கர்நாடக மாநிலம் நந்தி மலையை பிறப்பிடமாக கொண்ட பாலாறு 348 கிலோமீட்டர்  தூரத்தை கர்நாடக, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதிகளை கடந்து காஞ்சிபுரம் அருகே வயலூர் என்ற கிராமத்தில் கடலில் கலக்கின்றது  .

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

இதில் கர்நாடகாவில் 93  கிலோமீட்டர்  தூரத்தையும் , ஆந்திரா மாநிலத்தில் 33 கிலோமீட்டர்  தூரத்தையும் கடந்து தமிழ்நாட்டில் 222 கிலோமீட்டர் தூரம் பறந்து விரிந்து ஓடிக்கொண்டிருந்த பாலாறுதான் வட தமிழ்நாடு விவசாயிகளின்  உயிர் நாடியாகும். கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகள் பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீர்வரத்தை முற்றிலும் தடுத்துவிட்டது. வட தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்து வருவதற்கு இந்த கர்நாடக , ஆந்திரா அரசுகளின் தடுப்பணைகள்தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார் .

மேலும் வெங்கடேசன் கூறுகையில், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்  5.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் , பாலாற்று பாசனத்தை நம்பியுள்ளன. இருப்பினும் ஆந்திரா - தமிழ்நாடு அரசுகளின் தடுப்பணை பிரச்சனைகளால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு கூலி வேளைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

இந்நிலையில்தான் மத்திய நீர்வளத்துறை கடந்த  2008-ஆம்  ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓடும் தென் பெண்ணை ஆற்றை, பாலாற்றோடு இணைக்கும் திட்டத்திற்கான அறிக்கையை  வெளியிட்டது . அதன்படி 59.5 கி.மீ., நீள நெடுங்கல் அணையை நாட்றாம்பள்ளி கல்லாறு வரை இணைக்க ரூ.258.50 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது . ஆனால் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வேலூர் மாவட்டத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.648 கோடி மதிப்பில் தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இருப்பினும், இப்பணிகளை  இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

இப்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசாவது  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் வெங்கடேசன் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget