மேலும் அறிய

இளைய தலைமுறையினர் தொழில்நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக்கூடாது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2023) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE 23 50-வது மாநாட்டை தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2023) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE 23 50-வது மாநாட்டை தொடங்கி வைத்தார்.  அதன் பின்னர் அவர் பேசியதாவது, 

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பாக நடைபெறும் இந்த ஐம்பதாவது பிரிட்ஜ் கருத்தரங்கினைத் தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இது தொழில்நுட்ப காலம். தொழில்நுட்பத்தினுடைய யுகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மனிதரின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக தொழில்நுட்பப் பொருட்கள் இன்றைக்கு மாறியிருக்கின்றன. செல்போன், கம்ப்யூட்டர், இண்டெர்நெட் போன்றவை நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகியிருக்கிறது.

தொழில்நுட்பம், இன்று உலகத்தை ஒரு குடையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது. உலகில் எங்கோ ஒரு முனையில் நடப்பது - இன்னொரு முனைக்கு அப்போதே தெரியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய பயன்பாடு - கல்வித் துறையில்தான் இருக்கிறது. ஒருகாலத்தில் கல்வி அறிவை நாம் தேடிப் பெற்றோம். ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, விரல்நுனியில் வந்துவிட்டது; வகுப்பறைகள் நவீனமயமாகிவிட்டன.

கையளவு செல்பேசியில் அனைத்துப் புத்தகங்களும் நமக்குக் கிடைக்கின்றன. மாணவர்கள் அறிவோடு மட்டுமல்ல, அறிவியலோடும் இன்றைக்கு கற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நோய் தடுக்கும் முறை, கண்டறியும் முறை, காக்கும் முறை என எல்லாமே இப்போது எளிமையாக வந்திருக்கிறது. தனிமனித பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தொழில்நுட்பம் பேருதவி புரிந்து கொண்டிருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பம் பல பிரமிப்பூட்டும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. ஒரு காலத்தில் கனவாகத் தோன்றியது எல்லாம், இப்போது உண்மையாக வந்து கொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை, ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்படிப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தை அரசு நிருவாகத்திலும், மக்கள் சேவையிலும் புகுத்தி, நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்று சேர்ந்திட வேண்டுமென்பதை நன்கு உணர்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் , தனது ஆட்சிக் காலத்தில், இங்கே அமைச்சர்  மனோ தங்கராஜ் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல, தகவல் தொல்நுட்பத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திக் காட்டினார்.

தகவல் தொழில் நுட்பத்திற்கு - இரண்டு பக்கம் உண்டு. அதனை எப்படி, எந்தளவுக்கு, எந்த நோக்கத்துக்கு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதனுடைய பயன்கள் இருக்கும்.

இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு இதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது. தொழில் நுட்பங்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. வதந்திகளைப் பரப்பி சட்டம் ஒழுங்கை கெடுக்கவும் இதனை சில அரசியல் சக்திகள் பயன்படுத்துகிறார்கள். ஆபாச வலைத்தளங்களும் பெருகி வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை நித்தமும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டு பேசியிருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget