ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை போட்டு புதுவித போதை ஏற்றும் குடிமகன்கள்!

ஊரடங்கால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் போதைக்காக ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை கலந்து குடிக்கும் மது பிரியர்கள்

ஊரடங்கால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் போதைக்காக ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை கலந்து மது பிரியர்கள் குடிப்பதால் உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை போட்டு புதுவித போதை ஏற்றும் குடிமகன்கள்!

புதுச்சேரியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வீசுகிறது இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.  இதனால் அதிர்ச்சியடைந்த குடிமகன்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். தினமும் குடித்தே பாழாய்ப் போன குடிமகன்களின் பாடுதான் இப்போது திண்டாட்டமாகி விட்டது. ஊரடங்கால் இப்போது வேலை இல்லாததால் சரக்கு எங்கே கிடைக்கும் என வீதி வீதியாகவும், ஏரிக்கரை பகுதிகளில் தேடி அலைகின்றனர். இதைப் பயன்படுத்தி மதுபாட்டில்களை ஏற்கனவே வாங்கி பதுக்கி வைத்திருந்த சிலர், தற்போது கள்ளச்சந்தையில் இரு மடங்கு விலைக்கு விற்று நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.  சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து பாட்டில்களை அள்ளிச் சென்ற சம்பவங்களும் அரங்கேறின.ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை போட்டு புதுவித போதை ஏற்றும் குடிமகன்கள்!

இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்களை போதை பாடாய்படுத்தியது. இதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கிறார்கள். அதுவும் கிடைக்காமல் போனால் டியூப் பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் சொலுசனை முகர்ந்து பார்ப்பது, சோடாவில் காய்ச்சல் மாத்திரையை கலந்து குடிப்பது, குழந்தைகளுக்கான இருமல் டானிக்கை வாங்கி குடிப்பது, சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிப்பது என விபரீத முயற்சிகளில் இறங்கி வருகிறார்கள். இந்த வரிசையில் புதுவிதமாக போதைக்காக தலைவலி மாத்திரையை ஓம வாட்டரில் கலந்து குடிக்கும் வினோதம் புதுச்சேரி அருகே நடந்துள்ளது. திருக்கனூர், காட்டேரிக்குப்பம் போலீஸ் சரக பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தற்போது கடும் ஜோராக நடக்கிறது. அதாவது 30 ரூபாய்க்கு விற்ற 180 மில்லி அளவு கொண்ட சாராயம், தற்போது ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ரூ.130-க்கு விற்ற குவாட்டர் பிராந்தி ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகம் என்ற போதிலும் போதைக்காக மது பிரியர்கள் அதை வாங்கி குடிக்கின்றனர். மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளதால் மதுபழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதை விட முடியாமல் ஆபத்தான வழியில் இறங்கியுள்ளனர்.ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை போட்டு புதுவித போதை ஏற்றும் குடிமகன்கள்!

அதாவது போதை ஏற வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் ஓம வாட்டரை வாங்கி, அதில் தலைவலி மாத்திரைகளை போட்டு கலந்து குடிக்கிறார்கள். இப்படி செய்வதால் போதை ஏற்படுவதாக கூறப்படுகிறது. சிலர் குளிர்பான பாட்டில்களில் தலைவலி மாத்திரையை போட்டு குடிக்கிறார்கள். இதனால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அடிப்படையில் ஓம வாட்டர் விற்கும் கடைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த ஆண்டு இதுபோன்ற நிலை ஏற்பட்ட போது மதுபானத்தின் மீது கொரோனா வரி விதிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அதேபோன்று தற்போது கொரோனா வரியை கூட்டி சிறிது நேரமாவது மதுக்கடையை திறக்க வேண்டும் என்பது மதுபிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: lockdown pondicherry tasmac Oma water Headache pill mixed drinking

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News :தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரூபாய் 30 லட்சம் மிச்சம் - தமிழக அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரூபாய் 30 லட்சம் மிச்சம் - தமிழக அரசு

AIADMK legislature party meeting: அதிமுக கொறடா யார்? 14ம் தேதி எம்எல்ஏ.,கள் கூட்டம்

AIADMK legislature party meeting: அதிமுக கொறடா யார்? 14ம் தேதி எம்எல்ஏ.,கள் கூட்டம்

‛அனுமதியிருந்தும் கடலுக்கு போக முடியல...’ கலங்கும் மீனவர்கள்!

‛அனுமதியிருந்தும் கடலுக்கு போக முடியல...’ கலங்கும் மீனவர்கள்!

Tamil Nadu Weather | இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Weather | இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Chief Secretary: இரண்டு காய்கறிகள் போதும்; ஆய்வு ஆடம்பர உணவுக்கு தடை போட்ட இறையன்பு!

Tamil Nadu Chief Secretary: இரண்டு காய்கறிகள் போதும்; ஆய்வு ஆடம்பர உணவுக்கு தடை போட்ட இறையன்பு!

டாப் நியூஸ்

கிராம வளர்ச்சி  திட்டம் தயாரித்த  மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு !

கிராம வளர்ச்சி  திட்டம் தயாரித்த  மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு !

’என் வருமானம் முழுதும் மக்கள் பணிக்கே’ -ஆச்சரிய மருத்துவர் மகேஸ்வரன்

’என் வருமானம் முழுதும் மக்கள் பணிக்கே’ -ஆச்சரிய மருத்துவர் மகேஸ்வரன்

Arul Ramadoss on Social Media: ரூ.2 ஆயிரம் டோக்கன்; பதறிப்போன பாமக எம்.எல்.ஏ., !

Arul Ramadoss on Social Media: ரூ.2 ஆயிரம் டோக்கன்; பதறிப்போன பாமக எம்.எல்.ஏ., !

'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!

'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!