மேலும் அறிய

Free Marriage Cost: இலவச திருமண திட்ட செலவு; 50 ஆயிரமாக உயர்வு - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

கோயில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்தில் ஏழை எளிய மணமக்களுக்கு  அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவு 20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்தில் ஏழை எளிய மணமக்களுக்கு  அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவு 20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான அரசாணையில், 

”முதலாவதாகப் அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000/-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும். மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000/- திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 04:12.2022 அன்று சென்னை-1 மற்றும் சென்னை-2 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், மேற்படி 31 இணைகளையும் சேர்த்து 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன, இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி இன்னும் 283 ஏழை எளிய இணைகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்துவதற்காக மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவான ரூ.20.000/- தொகையினை ரூ.50,000/- ஆக உயர்த்தி, கீழ்க்கண்ட திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் – ரூ. 20,000

மணமகன் ஆடை – ரூ. 1000

மணமகள் ஆடை – ரூ. 2000

திருமணத்திற்கு மணமக்கள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு – ரூ. 2000

மாலை, புஷ்பம் – ரூ.1000

பீரோ-1 -  ரூ. 7800

கட்டில்-1 – ரூ. 7500

மெத்தை – ரூ. 2,200

தலையணை-2 – ரூ. 190

பாய் 1 – ரூ. 180

கைக்கடிகாரம்-2 – ரூ. 2000

மிக்ஸி-1 – ரூ. 1490

பூஜை பொருட்கள் + பாத்திரங்கள் – ரூ. 3640

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர்: அதனை ஏற்று. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர் அதனை ஏற்று. திருக்கோயில்களில் நடத்தப்படும். இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட செலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்படுவதாலும். உபயதாரர் கிடைக்காத நிலையில் நிதிவசதிமிக்க திருக்கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும், திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget