RTO Office on Saturday: மக்களே ஒரு செம்ம நியூஸ்.. இனிமே சனிக்கிழமைகூட லைசென்ஸ் வாங்கலாம்.. தமிழ்நாடு அரசு பிறப்பித்த வெயிட்டான உத்தரவு..
சென்னையில் இனி எல்லா சனிக்கிழமையும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் இனி சனிக்கிழமைகள் தோறும் வட்டார போக்குவரத்து அலவலகம் செயல்படும் என தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவது 99 ஆர்.டி.ஓ (regional transport office) எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இவை அனைத்தும் இந்திய மோட்டர் சட்டத்தின் படி அந்தந்த மாநில அரசுகளுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. பொதுவாக அரசு அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை செயல்படும். சனிக்கிழமை மற்றும் ஞாயிறு தோறும் விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி அரசு விடுமுறை நாட்களிலும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படாது.
பொதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, வாகனங்களை புதுப்பித்தலுக்கான பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் மக்களுக்காக இங்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒருவர் புதிதாக உரிமம் எடுக்க வேண்டும் என்றால் முதலில் பழகுநர் உரிமம் எடுக்க வேண்டும். அதன் பின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிய பின் அதில் தேர்ச்சி பெற்றால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
பலரும் வேலைக்கு செல்வதால் வார நாட்களில் மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஓட்டுநர் உரிமம் வாங்க சிரமப்பட்டு வந்தனர். வார இறுதி நாட்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் விடுமுறை என்பதால் மக்கள் உரிமம் பெறுவது கடினமாக இருந்தது. இதனால் ஏகப்பட்ட ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. இதனை சரி செய்து விரைந்து ஓட்டுநர் உரிமத்தை வழங்கும் ஒரு நட்வடிக்கையாக சென்னையில் இனி சனிக்கிழமை தோறும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான போக்குவரத் துறை கடிதத்தில், ‘அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை சனிக்கிழமைகளில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
30.12.2010 தேதியிட்ட நமது கடிதத்தில் 2வது குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்பட்டுள்ளது. இப்போது, டிரைவிங் ஸ்கூல் உட்பட அனைத்து வகை பொதுமக்களையும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.