Chandrayaan 3: நாளை விண்ணில் சீறிப்பாயும் சந்திரயான் 3 - தொடங்கியது கவுன்ட்டவுன்: வரலாற்றுச் சாதனை படைக்குமா இஸ்ரோ?
சந்திரயான் 3 நாளை மதியம் 2.35 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படும். அதற்கான 26 மணி நேர கவுண்டவுன் மதியம் 1.05 மணிக்கு தொடங்கியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நாளை (ஜூலை 14ஆம் தேதி), இந்திய நேரப்படி மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மேலும் சந்திரயான் 3 –க்கான 26 மணி நேர இன்று மதியம் 1.05 மணிக்கு தொடங்கியது.
Countdown for #Chandrayaan3, India’s third lunar exploration mission to begin today. 26-hour count down to begin at 1:05 pm.
— All India Radio News (@airnewsalerts) July 13, 2023
Indian Space Research Organisation (#ISRO) to launch Chandrayaan-3 by LVM3 rocket at 2:35 pm tomorrow from the Sathish Dhawan Space Centre,… pic.twitter.com/tDH833OvxU
சந்திரயான் திட்டம்:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.
சந்திரயான் – 2 ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ. 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
சந்திரயான் 3 திட்டம்:
சந்திரயான் 3 தயார் செய்யும் பணிகள் மிகவும் திவிரமாக இஸ்ரோ மேற்கொண்டது. குறிப்பாக கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சியிலும் விஞ்ஞானிகள் செயல்பட்டனர். அந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சந்திரயான்-3 மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் எஞ்சினின் சோதனை அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.
விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3:
இப்படி பலமுறை சோதனை செய்யப்பட்ட பின் நாளை ஜூலை 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஜூலை 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கு ஏவுதளத்தில் சந்திரயான் 3 விண்கலம் lvm3 உடன் இணைக்கப்பட்டது. தற்போது திட மற்றும் திடவ எரிப்பொருள் நிரப்பும் பணிகள் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை சரியாக மதியம் 2.35 மணியளவில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும்.