மேலும் அறிய

TN Rain Pattern: காலையில் வெயில்.. மாலையில் மழை.. சட்டென்று மாறுது வானிலை.. காரணத்தை சொன்ன வானியல் ஆய்வாளர்கள்..

பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் மழை பெய்ய காரணம் என்ன என்பது தொடர்பாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் நல்ல வெயிலும் மாலை நேரத்தில் நேர்மாறாக காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. இந்த வானியல் மாற்றம் செப்டம்பர் மாதத்தில் நிகழக்கூடிய வழ்க்கமான ஒன்று தான் என தனியார் வானியல் ஆய்வாளர் ஸ்ரீகாந்த தெரிவித்துள்ளார். வழக்கமாக தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு மேற்கு திசையிலிருந்து தான் காற்று வீசும். இந்த காற்று வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும். மேலும் பகல் நேரங்களில் அதிகப்படியான வெயிலின் காரணமாக மாலை நேரத்தில் மேகக்கூட்டங்கள் தோன்றி இடி மின்னல் உருவாகி கனமழை பெய்வதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். அப்போது தமிழ்நாட்டிற்கு கிழக்கு திசையிலிருந்து காற்று வீசும். தற்போது வரை தென்மேற்கு பருவ மழை முடிவடையாத நிலையில் தெற்கு திசை காற்று வீசி வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை காலை நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் மழையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் இது தொடர்பாக பேசுகையில் பகல் நேரங்களில் அதிகபட்சமான வெயிலின் காரணமாக வெப்பச் சலனம் உருவாகி மேகக்கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் இயல்பான ஒன்று தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று காலையில் நல்ல வெயில் இருந்த நிலை மாலை அப்படியே வானிலை தலைகீழாக மாறியது. சூறைக்காற்றுடன் இடி மின்னல்கூடிய கனமழை பெய்து வந்தது. தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், கிண்டி, அடையாறு என நகரின் அனேக பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

மேலும் இன்று காலை முதல் நல்ல வெயில் உள்ள நிலையில் மாலையில் கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 1996 ஆம்  ஆண்டிற்கு பின் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மழை அளவீடு இந்த ஆண்டு முறியடித்துள்ளது. அதாவது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சென்னையில் 877 மிமீ மழை பதிவாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டு இந்த அளவு 871 ஆக இருந்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மழை அளவு கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்  மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget