மேலும் அறிய

குளித்தலை அருகே பெயர்ந்து வந்த புதிதாக போடப்பட்ட தார் சாலை - பொதுமக்கள் வேதனை

குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் வடக்குத் தெருவிலிருந்து சீகம்பட்டிக்கு செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்துள்ளனர்.

குளித்தலை அருகே மேல தாளியாம்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக போடப்பட்ட தார்சாலை ஒரு வார காலத்திற்குள் ஏடு, ஏடாக பிரிந்து வந்த அவலத்தால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

குளித்தலை அருகே  பெயர்ந்து வந்த புதிதாக போடப்பட்ட தார் சாலை - பொதுமக்கள் வேதனை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் வடக்குத் தெருவிலிருந்து சீகம்பட்டிக்கு செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்துள்ளனர். மழைக்காலங்களில் அந்த சாலை மிகவும் சேதம் அடைந்தும், தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் புதிய தார் சாலை அமைக்க வேண்டுமென சுமார் 20 ஆண்டுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஏற்று குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 29 லட்சம் மதிப்பில் சுமார் 670 மீட்டர் தூரம் வரை புதிய தார்சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி  பணிகள் நடைபெற்றன. புதிய தார்ச்சலை அமைக்கும் பணியினை மேற்கொண்ட திமுக ஒப்பந்ததாரர் அண்ணாதுரை, தார் சாலை அமைக்கும் பணியினை காலம் தாழ்த்தி வந்ததோடு தரமற்ற சாலையினை அமைத்துள்ளார்.

குளித்தலை அருகே  பெயர்ந்து வந்த புதிதாக போடப்பட்ட தார் சாலை - பொதுமக்கள் வேதனை

புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் தார் சாலை தோசை கல்லில் இருந்து பிரித்து எடுப்பது போல் ஏடு, ஏடாக பிரிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லும்போது தார் சாலை பெயர்ந்து  பூமிக்குள் அமுக்கியவாறு  பள்ளம் ஏற்ப்படுகிறது. புதிய தார் சாலை முறையாக  போடாமல் உள்ளதால் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளங்களாகவும் காட்சி அளித்து வருகிறது.  பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் உதவி செயற்பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கே வருவதும் இல்லை, ஆய்வு செய்வதும் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சுமார் 670 மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட வேண்டிய தார் சாலை 420 மீட்டர் தூரம் வரை தான் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலையை நாங்கள் பல ஆண்டுகளாக நடைபாதைகாகவும் விவசாய பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தி வந்ததாகவும், மழைக்காலங்களில்  மழைநீர் தேங்கி செல்வதற்கு சிரமப்பட்டு வந்த காரணத்தினால் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

குளித்தலை அருகே  பெயர்ந்து வந்த புதிதாக போடப்பட்ட தார் சாலை - பொதுமக்கள் வேதனை

குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம், எங்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 29 லட்சம் மதிப்பில் 670 மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கி கடந்த 9 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை செய்து பணிகள் துவங்கப்பட்டதாகவும், ஆனால் ஒப்பந்ததாரர் சாலையை போடுவதற்கு காலம் தாழ்த்தியும், பொதுமக்கள் சீக்கிரம் சாலையை அமைக்க ஒப்பந்ததாரிடம் வலியுறுத்தியதால், ஒரு வாரத்திற்கு முன்பு இரவோடு இரவாக அவசரக் கதியில் தரமற்ற முறையில் அமைத்துள்ளதால் தற்போது சாலை ஆங்காங்கே பெயர்ந்து ஏடு போல் பெயர்ந்து வருகிறது. எங்களின்  நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சாலை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது சாலை தரமாக  இல்லாததால் நாங்கள் மன வேதனை அடைந்துள்ளதாகவும்,  மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மீண்டும் தரமற்ற சாலை அகற்றிவிட்டு, புதுப்பித்து தரமான முறையில் புதிதாக சாலை அமைத்து தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget