கரூரில் முருங்கையின் விலை அதிகரிக்க வாய்ப்பு - முருங்கைப் பணியில் விவசாயிகள் விறுவிறுப்பு
தென்மேற்கு பருவமழை அறிவிப்பால், கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கை சாகுபடி பணியை விவசாயிகள் விறுவிறுப்பாக துவங்கி உள்ளனர் .
தென்மேற்கு பருவமழையை நம்பி முருங்கை சாகுபடியில் விவசாயிகள்
தென்மேற்கு பருவமழை அறிவிப்பால், கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கை சாகுபடி பணியை விவசாயிகள் விறுவிறுப்பாக துவங்கி உள்ளனர் .அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குத்தப்பாளையம். தடா கோவில், நெஞ்சான் கூடலூர், ஈசநத்தம், அம்மாபட்டி, ஊத்தூர் ,பெரிய மஞ்சுவலி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது .திரட்சியான தடிப்பான அருவக்குறிச்சியில் விளையும் ருசியான முருங்கைக்கு தமிழக மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு .வரட்சியான பகுதியான, அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், விளையும் உயர்ந்தது. குறிப்பாக , கடந்த ஆண்டுகளில் முகூர்த்த சீசன் காலங்களில், ஒரு கிலோ முருங்கை, 120 விற்பனை செய்யப்பட்டது .ஒரு முருங்கைக்காய், ₹8 லிருந்து 10 ரூபாய் வரை, விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு இறுதியில், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்தது. அதைத்தொடர்ந்து ,தென்மேற்கு பருவ மலையும் வரும் மே, 15 முதல் எதிர்பார்த்த அளவைவிட அதிகாலை பொய் வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அரவாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, முருங்கை மரங்களை சாகுபடிக்கு தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது. கடந்த சில நாட்களாக, அவ்வப்போது பெய்யும் கோடை மழையால் முருங்கை மரங்களில், பூக்கள் துளிர் விட ஆரம்பியுள்ளது. இதனால் காய் உற்பத்தி எதிர்பார்த்த அளவில் இருக்கும்.
மேலும் காய்கள் முழு வளர்ச்சி அடைந்து பெரிய அளவில் வரும். வைகாசி மாத அதிக அளவில் திருமணம் சீசன் உள்ளிட்ட சுப காரியங்கள் தொடங்கும். அப்போது அதிகளவில் முருங்கைக்கு தேவை ஏற்படும் . இதனால் விலை ஏற வாய்ப்புண்டு. இதனால், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் முகூர்த்த சீசன் தேவைக்காக, முருங்கை சாகுபடி தீவிரப்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்