மேலும் அறிய

அன்று கைது செய்த காவல்துறையினர் இன்று எனக்கு பாதுகாப்பு வழங்குகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை  இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மாணவர் கையாளும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகிறது. 2023-24 -ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கில மொழியை கையாளும் திறனை மேம்படுத்துவதில் இத்திட்டம் முனைப்புடன் செயல்படுகிறது. மாநிலம் முழுவதிலும் 23 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் மொத்தம் 89,680 செயல்படும் நிலையில் இருக்கும் கணினிகள் மொழி ஆய்வகங்களாக செயல்படும். 

அன்று கைது செய்த காவல்துறையினர் இன்று எனக்கு பாதுகாப்பு வழங்குகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த மொழி ஆய்வகங்களின் வாயிலாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வகத்தில் உள்ள கணினியை இயக்கி பார்த்து மாணவர்களுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார். 

Indian 2 Update: பிரம்மாண்ட ரயில் சண்டை... தென் ஆப்பிரிக்கா விரைந்த படக்குழு...இந்தியன் 2 புது அப்டேட் இதோ!

அன்று கைது செய்த காவல்துறையினர் இன்று எனக்கு பாதுகாப்பு வழங்குகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அப்போது விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்த இடத்தில் நீ நிராகரிக்கப்படுகிறாயோ அந்த இடத்தில் நீ நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளங்குவதாக கூறினார். தொடர்ந்து விழாவில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக தமிழ்நாட்டில் மொழிகள் ஆய்வகம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி அறிவு, சாஃப்ட் ஸ்கில் ட்ரைனிங் மூலம் எளிதாக வேலைவாய்ப்பை பெற முடியும். மொழி ஆய்வகத்தை முறையாக பயன்படுத்தி செய்முறை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு பள்ளி கல்வித்துறை மூலம் வழங்கப்படும். இந்த மொழிகள் ஆய்வக திட்டம் குறித்து இந்த பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவன் தனக்கு எளிய முறையில் விளக்கியதாகவும்  தெரிவித்தார்.

அன்று கைது செய்த காவல்துறையினர் இன்று எனக்கு பாதுகாப்பு வழங்குகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 மேலும் தமிழக அரசு கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து  வருகிறது என்றும், கடந்த 2020 -ஆம் ஆண்டு விடியலை நோக்கி பயணம் மேற்கொண்ட போது இதே குத்தாலம் பகுதியில் போலீசார் என்னை கைது செய்து தனியார் மண்டபத்தில் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்தனர். தற்போது அதே போலீசார் எனக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர் என்று  காவல்துறையை சூசகமாக கோலி செய்தார்.  இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: உண்மைய சொல்வது குற்றமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: உண்மைய சொல்வது குற்றமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: உண்மைய சொல்வது குற்றமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: உண்மைய சொல்வது குற்றமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Share Market: பங்குச் சந்தை புதிய உச்சம் -  சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளையும்,  நிஃப்டி 24,200 புள்ளிகளையும் நெருங்கியது
Share Market: பங்குச் சந்தை புதிய உச்சம் - சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளையும், நிஃப்டி 24,200 புள்ளிகளையும் நெருங்கியது
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி சேமிப்பு
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Embed widget