மேலும் அறிய

Indian 2 Update: பிரம்மாண்ட ரயில் சண்டை... தென் ஆப்பிரிக்கா விரைந்த படக்குழு...இந்தியன் 2 புது அப்டேட் இதோ!

இந்த ஆண்டு மே மாதத்துடன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், வரும் தீபாவளிக்கு இந்தியன் 2 ரிலீசாகலாம் எனக் கூறப்படுகிறது. 

இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தென் ஆப்பிரிக்கா விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் -  கோலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எனக் கொண்டாடப்படும் இயக்குநர் சங்கர் இருவரது கூட்டணியின் 1996ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். 

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களுள் ஒருவரான கமல்ஹாசன் இந்தப் படத்தில் இந்தியன் தாத்தாவாகக் கலக்கி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்து, வசூலிலும் இந்தப் படம் சாதனை படைத்தது.

மேலும் அன்று தொடங்கியே இந்தியன் 2 படம் குறித்த எதிர்பார்ப்புகளும் உரையாடல்களும் தொடர்ந்து வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் தொடங்கியது.

ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்து, கொரோனா ஊரடங்கு, கமல்ஹாசனின் அரசியல் பயணம், சங்கர் - லைகா நிறுவனம் இடையேயான மோதல் ஆகியவற்றால் தடைபட்டது. தொடர்ந்து இந்தப் பிரச்னைகள் ஓய்ந்து சென்ற செப்டெம்பர் மாதம் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, பீகார் வனப்பகுதிகள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தியன்  படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நிறைவுற்று படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தென் ஆப்பிரிக்கா விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த 14 நாள்களுக்கு இயக்குநர் சங்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் தென் ஆப்பிரிக்காவில் தான் இருப்பார்கள் என்றும், சர்வதேச ஸ்டண்ட் கொரியோகிராஃபர்கள் சண்டைக் காட்சிகளை அமைக்க, ரயிலில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் காட்சி இந்தியன் 2 படத்தில் இடம்பெற உள்ள முக்கிய, திருப்புமுனைக் காட்சியாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு மே மாதத்துடன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், வரும் தீபாவளிக்கு இந்தியன் 2 ரிலீசாகலாம் எனக் கூறப்படுகிறது. 

மேலும் இந்தியன் 2 படத்தில் 90 வயது இந்தியன் தாத்தா கெட் அப்பில் நடிகர் நடிக்கும் நிலையில்,  அவருக்கு  ஜோடியாக காஜல் நடிப்பதாகவும், காஜலின் மேக் அப்புக்காக மட்டும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாவதாகவும் முன்னதாகத் தகவல் வெளியானது. 

இதேபோல், இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஏழு வில்லன்கள் இருப்பதாகவும், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், சித்தார்த், பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், ஜி.மாரிமுத்து, கிஷோர் ஆகியோர் வில்லன்களாக இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை காண்பிக்காத, படப்பிடிப்பு நடத்தப்படாத லொகேஷன்களை இந்தப் படத்துக்காக தேடித்தேடி படப்பிடிப்பு நிகழ்த்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
Embed widget