மேலும் அறிய

Anbumani: இறந்த குழந்தை உடலை 10 கி.மீ. சுமந்து சென்றது அரசு தலைகுனிய வேண்டிய அவலம் - அன்புமணி ராமதாஸ் வேதனை

சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சாலை வசதி இல்லாததால் உயிரிழப்பு:

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் கூறியிருப்பதாவது,

"வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை  அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்து விட்டது; உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீண்டு வர இயலவில்லை.

தலைகுனிய வேண்டிய அவலம்:

ஒதிஷாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே கேள்விப்பட்ட அவலம் தமிழ்நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதி கிராமங்களுக்கு பெரும்பாலும் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டன. அத்திமரத்துக் கொல்லை என்பது மலைக்கிராமம் என்பதால் தான்  சாலை அமைக்கப்படவில்லை என்ற காரணத்திற்குள் நுழைந்து தப்பிவிட நாம் முயலக்கூடாது. அத்திமரத்துக் கொல்லை கிராமத்திலிருந்து சாலை அமைப்பது சாத்தியம் தான்; இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும்  அங்கு  சாலை அமைக்கப்படவில்லை என்பது அரசு நிர்வாகம் தலைகுனிய வேண்டிய அவலம் தான்.

அத்திமரத்துக் கொல்லை போன்று சாலை வசதி இல்லாத கிராமங்கள் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன. விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் சாலை வசதி இல்லை என்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மலைப்பகுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் கூடுதல் நிதியும், மானியமும் ஒதுக்கப்படும் நிலையில், அதைப் பயன்படுத்தி சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இனி நடக்கக்கூடாது:

சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது. அதிவிரைவுச் சாலைகளும், எட்டுவழிச் சாலைகளும் அதிக அளவில்  அமைக்கப்பட்டு வரும் சூழலில், மலைக்கிராமங்களுக்கு சாலையே இல்லை என்பது  வெட்கப்பட வேண்டிய வளர்ச்சி இடைவெளி ஆகும்.  அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
Fengal Cyclone LIVEஃபெஞ்சல் புயல்! சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
Embed widget