அழுகிய முட்டை... புழுக்களுடன் சத்துணவு பொருட்கள் வினியோகம்... குழந்தைகளுடன் வந்த பெற்றோர் அதிர்ச்சி!
சத்துணவு முட்டை அழுகிய நிலையில் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், தொண்ட மாங்கிணம் ஊராட்சி கவுண்டம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 250 மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர் . கொரோனா கட்டுபாடு காரணமாக பள்ளிகள் மூடியிருப்பதால் மாணவ , மாணவிகளுக்கு வாரம்தோறும் சத்துணவுப் பொருட்களான அரிசி , பருப்பு , முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தப்பள்ளியில் மாணவ , மாணவிகள் பெற் றோர்களுடன் சத்துணவு உணவை வாங்க வந்துள்ளனர் . அப்போது மாணவர்களுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் அழுகி புழுக்கள் வைத்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதை பார்த்த மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மாணவ, மாணவிகளுக்காக வழங்கப்படும் முட்டைகள் தரமாக உள்ளதா என பரிசோதித்து வழங்க வேண்டும். மேலும் முட்டை டெண்டர் எடுத்தவர்கள் பள்ளிகளுக்கு வழங்கும் முட்டைகளை தரமானதாக வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முட்டை அழுகி புழுக்கள் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஆதாரமாகக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு பள்ளிக்கு நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்து அதிகாரிகளுடன்கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளை முறையாக பராமரிக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டதால் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இதுகுறித்து உரிய விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் சில முக்கியச் செய்திகள் இதோ...
காதலருடன் சேர்ந்து தாயை கொன்ற அமெரிக்கப் பெண் : விடுதலை செய்த இந்தோனேசியா!https://t.co/glBfKQ336Y#Indonesia #Murder #Released
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
சரவெடிக்கு தடை... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுhttps://t.co/Yav5Cvz9z0#firecrackers #Diwali2021
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )