TN Rain Alerts: இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
12.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.10.2023 முதல் 15.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 6, கொடைக்கானல் (திண்டுக்கல்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 5, அழகரை எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி) தலா 4, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), பூதலூர் (தஞ்சாவூர்), ஏற்காடு (சேலம்), குந்தா பாலம் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), தேக்கடி (தேனி), கொத்தவாச்சேரி (கடலூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 3, சிவகிரி (தென்காசி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பெரியநாயக்கன் பாளையம் (கோயம்புத்தூர்), கிருஷ்ணகிரி, சின்கோனா (கோயம்புத்தூர்), கீரனூர் (புதுக்கோட்டை), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி) தலா 2, பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), செங்கம் (திருவண்ணாமலை), கோத்தகிரி (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கேத்தி (நீலகிரி), ஆத்தூர் (சேலம்), அன்னூர் (கோயம்புத்தூர்), பர்லியார் (நீலகிரி), கோடிவேரி (ஈரோடு), கல்லந்திரி (மதுரை), பாலக்கோடு (தர்மபுரி), எமரால்டு (நீலகிரி), கெத்தை (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), கங்கவல்லி (சேலம்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), பெரம்பலூர் (பெரம்பலூர்), பெரியாறு (தேனி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
09.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.