மேலும் அறிய

முன்பு ஸ்டாலினை அடிக்கடி சந்தித்தோம்; முதல்வரான பிறகு சந்திக்க முடியவில்லை-அரசு ஊழியர்கள் சங்கம்...!

கோரிக்கைகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், வரும் செப்டம்பர் 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  வரும் செப்டம்பர் 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூரில் நேற்று அச்சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத்தலைவர் சிவக்குமார், மாநில அமைப்புச் செயலாளர் சிவக்குமார், மாநில துணைத் தலைவர் ஜெயச்சந்திரராஜா, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன், தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரன், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வை வழங்கியது போல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக எந்தவித பொருளாதார காரணங்களையும் முன்வைக்காமல், அகவிலைப் படியை 28 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும். இதனை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை அமல்படுத்த வேண்டும்,

தமிழகத்தில் அரசுப்பணிகளில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும், அரசுப் பணிகளில் ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும், டாஸ்மாக், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டவைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களை நிரந்த ஊழியர்களாக்கி, நிரந்த ஊதிய விகித்தில் ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக 18 ஆயிரமும் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரமும்  வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்,

தமிழக முதல்வராக உள்ள முக.ஸ்டாலினை கடந்த ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட நெருக்கடி, குளறுபடிகளை அடிக்கடி சந்தித்து, சங்கங்களின் கோரிக்கை தெரிவித்து வந்தோம். ஆனால் முக.ஸ்டாலின் முல்வரான பிறகு,  சந்திக்க வேண்டும் என கடிதம் கொடுத்தும், சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, மூன்று முறை, அமைச்சர்கள், முதன்மை செயலாளரிடம் கடிதம் கொடுத்தும், எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. முதல்வரையும் சந்திக்க முடியவில்லை. விரைவில் எங்களை முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணுவார் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

மேலும் இக்கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து வந்து போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்  என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
Embed widget