Senthil Balaji Summon: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பிரிவு சம்மன்...
Senthil Balaji Summon: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பிரிவு சம்மன்...
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தொடர்புடைய 120 பேருக்கு குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜூலை 6 ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆணையர் அலுவகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தம்பி அசோக் தலைமறைவாக இருப்பதால் அடுத்த கட்டத்தை நோக்கி சென்னை மத்திய குற்றப்பிரிவு நகரத் தொடங்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் அவரை கைது செய்ய போது நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி (open heart surgery) செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு உள்ளனார் . இப்படி இருக்கும் சூழலில் வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜி மோசடி செய்த வழக்கில் அப்போது பணியமர்த்தப்பட்ட பஸ் ஓட்டுநர் நடத்துனர் என 120 க்கும் மேற்பட நபர்களிடம் மத்திய குற்ற பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது 2018 இல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அந்த வழக்கை விசாரிக்கும்படி உச்சநீதிமன்ற உத்தரவிட்டதின்படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தபோது நேர்முகத்தேர்வு நடத்திய அதிகாரிகளிடமும் சமீபத்தில் விசாரணை நடத்தி இருந்தனர். பணியமர்த்தப்பட்ட பஸ் ஓட்டுனர் நடத்துனர் என அனைவருக்கும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஜூலை 6ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நான்காவது மாடியில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணத்துடன் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.