மேலும் அறிய

மரக்கட்டையில் தூக்கிச்சென்ற இளம்பெண்ணின் உடல்; அனைத்து கிராமங்களுக்கும் சாலை எப்போது?- ராமதாஸ் வேதனை

அனைத்து கிராமங்களுக்கும் சாலை அமைத்துத் தர சிறப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

சாலை இல்லாததால்  இளம் பெண்ணின் உடலை  பல  கி.மீ. தொலைவுக்கு மரக்கட்டையில் கட்டி உறவினர்கள் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளதாகவும் அனைத்து கிராமங்களுக்கும் சாலை அமைத்துத் தர சிறப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த நிலையில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள எலந்தம்பட்டு  கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணின் உடலை  அவரது சொந்த ஊருக்கு  எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி மலையடிவாரத்திலிருந்து எலந்தம்பட்டு கிராமம் வரை அவரது உறவினர்கள் தோள்களில் தூக்கி சுமந்து சென்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியும்,  வேதனையும் அளிக்கிறது. வேலூர் மருத்துவமனையில் இருந்து சாந்தியின் உடல் அவசர ஊர்தியில் எடுத்து வரப்பட்ட போதிலும், தொடர்ந்து கொண்டு செல்ல அடிப்படையான சாலை வசதிகள் கூட இல்லாத நிலையில், இந்த அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

உயிரிழந்தவர்கள் மரியாதையுடன் வணங்கப்பட வேண்டியவர்கள். ஆனால், உயிரிழந்த சாந்தியின் உடலை கொண்டு செல்ல சாலை இல்லாத நிலையில்,  மரியாதையுடன் வணங்கப்பட வேண்டிய அவரின் உடலை கால்நடைகளுக்கு இணையாக மரக்கட்டையில் கட்டி சுமந்து சென்றிருப்பது எவ்வளவு கொடுமையானது? இது தொடர்பான காணொலியை காண்பதற்கே மிகவும் கொடுமையாக உள்ளது. ஒருபுறம் ஜி 20 மாநாட்டை நடத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டதாக பெருமை பேசிக் கொள்ளும் நம்மை,  நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் மலை கிராமங்களுக்கு சாலை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்ற உண்மை சம்மட்டி அடியாய் தாக்குகிறது.

 சாலை வசதிகள் கூட இல்லை

கடந்த மே மாதம் 28-ஆம் நாள்  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில், பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் அக்குழந்தை இறந்ததும், உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ. தொலைவுக்கு பெற்றோரால் சுமந்து செல்லப்பட்டதும் தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிகளை உலுக்கியது. ஒடிசாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே நிகழ்ந்த அவலங்கள் தமிழ்நாட்டிலும் நடப்பதை சுட்டிக்காட்டிய  பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில்   அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவ காலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும்; அதுவரை தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. அதை செய்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.

வேலூர் மாவட்டம் அத்திமரத்துக் கொல்லை நிகழ்வை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டியதற்கு அடுத்த நாள் அத்திமரத்துக் கொல்லை கிராமத்துக்கு சென்ற  வேலூர் மாவட்ட ஆட்சியர், சாலை அமைத்துக் கொடுக்காததற்காக அங்குள்ள மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன், உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்  என்று அறிவித்தார். அதன்படி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் மலைக் கிராமங்களுக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அடிப்படைக் கடமையைக் கூட அவரும், அரசும் செய்யத் தவறி விட்டனர்.

சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் நிகழ்வுகள்  தமிழகத்திற்கு பெரும் அவமானம் ஆகும். அத்தகைய அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது.  இனியாவது அரசு விழித்துக்  கொண்டு, அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவ காலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க  வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget