மேலும் அறிய

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

தமிழகத்தில் கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 10 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், கோயில்களுக்கு சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் கடந்த 10-ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை. சித்திரைத் திருவிழா உள்பட தமிழகத்தில் வரும் மாதங்களில் பல்வேறு முக்கிய பண்டிகைககள் கொண்டாடப்படவுள்ளது.

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இன்று பிறப்பித்த உத்தரவில், “நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.04.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது. 31.8.2020-இல் வெளியிட்ட அறிவிப்பின்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, திருக்கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும். இருப்பினும், திருக்கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த திருக்கோயில் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதியில்லை.

100 சதுர மீட்டர் அல்லது 1075 சதுர அடிக்கு உள்ள கோயில்களில் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்க கூடாது மற்றும் திருமண விழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. கோவில்களின் திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதித்து சமூக இடைவெளி கடைபிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!
திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!
முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget