
Tejas Express : தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் : இவரின் தொடர் முயற்சியால் நிறைவேற்றம் - திமுக...!
முதல் முறையாக தாம்பரம் ரயில்நிலையத்தில் இன்று முதல் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் சேவையை மத்திய அமைச்சர் எல் முருகன் மற்றும் டி.ஆர்.பாலு கொடியை அசைத்து துவக்கி வைத்தனர்

Tejas Express : முதல் முறையாக தாம்பரம் ரயில்நிலையத்தில் இன்று முதல் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் சேவையை மத்திய அமைச்சர் எல் முருகன் மற்றும் டி.ஆர்.பாலு கொடியை அசைத்து துவக்கி வைத்தனர்
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இன்று முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்கிறது. இந்த சேவையின் தொடக்க விழா தாம்பரம் ரயில நிலையத்தில் நடைபெற்றது. அதில் திமுக மக்களை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாநகர மேயம் வசந்தகுமாரி ஆகியயோர் கலந்து கொண்டனர்.
அப்போது, திமுக மக்களை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாநகர மேயம் வசந்தகுமாரி ஆகியயோர் கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
”2019 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே, திரு. டி.ஆர்.பாலு, எம்.பி., சென்னை மதுரை - சென்னை வழித்தடத்தில் செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் நிலையத்தில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை 30.5.2019 அன்று ரயில் வாரியத் தலைவர் திரு. வினோத் யாதவ் அவர்களுக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதன் விளைவாக 21.06.2019 அன்று இந்தக் கோரிக்கையை தெற்கு ரயில்வே புது டெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்திற்குக் கால அட்டவணை பரிந்துரைத்தது.
டி.ஆர்.பாலு, எம்.பி. அவர்கள், ஏறத்தாழ நான்கு இருமார்க்கங்களிலும் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று 26.2.2023 முதல் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் மூலம் பயனடைவர். 4 ஆண்டுகளாக அயராமல் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தென் தமிழகத்துக்குச் செல்லும் பல லட்சம் ரயில் பயணிகள் 26.2.2023 முதல் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் சேவையின் மூலம் பயனடைவர்.
நீண்ட தாமதத்திற்கு பிறகு ஒன்றிய அரசு லட்சக்கணக்கான ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக் கொள்ள முயற்சிப்பது சரியல்ல. இல்லையென்றால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சேதுசமுத்திரத் திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை துறைமுகம் மதுரவாயல் - உயர்மட்ட விரைவுச் சாலை, 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்சனை, ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளில் இவர்கள் தலையிட்டு செய்து காட்டியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை ? தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்!” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

