Tauktae Cyclone | அதி தீவிர புயலாக வலுப்பெற்றது 'டவ்-தே' : மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை..
தாக்டே புயல், தற்போது மிக அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நேற்று மதியம் நிலைகொண்டிருந்த டவ்-தே புயல், தற்போது அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.
தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட சமீபத்திய தகவல்களின்படி, “டவ்-தே அதி தீவிர புயலாக வலுவடைந்து, இன்று காலை (மே 16) 0230 மணியளவில் பஞ்சிம் கோவாவுக்கு 150 கிலோமீட்டர் தெற்கு தென் மேற்கிலும், வேராவலுக்கு (குஜராத்) 730 கிலோமீட்டர் தெற்கு தென் கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. இது, மேலும் வலுவடைந்து வடக்கு-மேற்கு திசையில் நகர்ந்து மே 18 மதியம் அல்லது மாலையில் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்த்து.
இந்த அதிதீவிர புயலின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (மே - 16) நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Date/Time(IST) |
Position (Lat. 0N/ long. 0E) |
Maximum sustained surface wind speed (Kmph) |
Category of cyclonic disturbance |
15.05.21/0830 |
12.8/72.5 |
75-85 gusting to 95 |
Cyclonic Storm |
15.05.21/1130 |
13.2/72.5 |
85-95 gusting to 105 |
Severe Cyclonic Storm |
15.05.21/1730 |
13.8/72.4 |
95-105 gusting to 115 |
Severe Cyclonic Storm |
15.05.21/2330 |
14.5/72.3 |
110-120 gusting to 135 |
Severe Cyclonic Storm |
16.05.21/0530 |
15.3/72.0 |
120-130 gusting to 145 |
Very Severe Cyclonic Storm |
16.05.21/1730 |
16.5/71.5 |
130-140 gusting to 155 |
Very Severe Cyclonic Storm |
17.05.21/0530 |
18.0/70.7 |
145-155 gusting to 165 |
Very Severe Cyclonic Storm |
17.05.21/1730 |
19.5/70.0 |
150-160 gusting to 175 |
Very Severe Cyclonic Storm |
18.05.21/0530 |
20.7/69.4 |
150-160 gusting to 175 |
Very Severe Cyclonic Storm |
18.05.21/1730 |
22.0/69.1 |
145-155 gusting to 165 |
Very Severe Cyclonic Storm |
19.05.21/0530 |
24.5/70.0 |
70-80 gusting to 90 |
Cyclonic Storm |
17.05.2021: நீலகிரி, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
18.05.2021: நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
19.05.2021: நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்
சென்னை வானிலை: சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானமழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் எச்சரிக்கை: மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75-85 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், எனவே, மீஎனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது.