TASMAC Workers Salary: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு - அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருக்கிறார்.
#BREAKING | டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு https://t.co/wupaoCQKa2 | #TASMAC #TNGovt #SenthilBalaji pic.twitter.com/vpZqHxlbe7
— ABP Nadu (@abpnadu) April 26, 2022
2022 ஏப்ரல் மாதம் முதல் 24,085 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊதிய உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு 16.67 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | தமிழ்நாட்டில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி https://t.co/wupaoCQKa2 | #TNAssembly #Senthilbalaji #TNGovt #Farmers pic.twitter.com/yho7tBz2mx
— ABP Nadu (@abpnadu) April 26, 2022
மேலும், 50000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்ட தகவல் தெரிவித்துள்ளார்.
பிற முக்கியச் செய்திகள்:
உலகத்துக்கு CEO...நிஜ ராக்கிபாயாக திட்டமிடும் எலான் மஸ்க்! https://t.co/wupaoCQKa2 | #ElonMusk #ElonMuskBuysTwitter #Tesla @elonmusk pic.twitter.com/93UEZ47WO5
— ABP Nadu (@abpnadu) April 26, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்