மேலும் அறிய

Senthil Balaji on TASMAC: டாஸ்மாக், பார்கள் உரிய நேரத்தில் மூடப்படுகின்றதா? - ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவு

டாஸ்மாக், பார்கள் உரிய நேரத்தில் மூடப்படுகின்றதா? என கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக், பார்கள் உரிய நேரத்தில் மூடப்படுகின்றதா? என கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"அமைச்சர்  செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இன்று (23.05.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர்கள் (கலால்) மற்றும் உதவி ஆணையர்களுடனான (கலால்) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு முதன்மை செயலாளர் பெ.அமுதா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர்  எம்.மதிவாணன்,  மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர்கள் (கலால்) மற்றும் உதவி ஆணையர்கள் (கலால்) கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது,

"தொழிற்சாலைகளால் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால், இயல்பு மாற்றப்பட்ட சாராவி மற்றும் தெளிந்த சாராவி ஆகியன உரிய வழிமுறையாக பெறப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உரிய உரிமதாரர்களுக்கு மட்டுமே சாராவி மற்றும் தெளிந்த சாராவி விற்பனை செய்யப்படுகிறதா? என்பதையும், பெறப்படுகின்ற மூலப்பொருள் எதனை உற்பத்தி செய்ய வழங்கப்படுகிறதோ, அதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா? மற்றும் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், 

மதுகூடங்கள் அனுமதிக்கப்பட நேரத்திற்குள் மூடப்படுவதை கண்காணிக்க வேண்டும்

மனமகிழ் மன்றங்கள் (Clubs) மற்றும் ஹோட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா? என்பதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகள், எப்.எல்.2 உரிமம் பெற்ற கிளப், எப்.எல்.3 உரிமம் பெற்ற ஹோட்டல், NDRC உரிம தலங்கள் ஆகியவற்றை கண்காணித்து விதிமுறைகள் ஏதேனும் மீதி இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தல்

கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லை மாவட்டங்களில் தொடர்புடைய மாவட்ட கலால் அலுவலர்கள் கலால் காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து, காவல் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பினை மேற்கொண்டு வெளிமாநில மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டவை, மனமகிழ் மன்றங்கள் (Clubs) மற்றும் ஹோட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுக்கிறதா என்பதை களஆய்வு மேற்கொள்ள வேண்டும். மதுவில்லா நாட்கள் (Dry days) மற்றும் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நாட்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதை களஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும்.

போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க,கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும். மேலும், அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்டத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்தி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், போதை மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்டந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் விழிப்புணர்வுப் பேரணி, முகாம்கள், கருத்தரங்குகள், தெரு நாடகங்கள், சிறு நாடகங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பொது இடங்களில் விளம்பரம் மற்றும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், மனித சங்கிலி பேரணி ன்போன்றவற்றி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த குழு கலந்துரையாடல், துண்டு பிரசுரம், கட்டுரைப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை கல்லூரிகளில் நடத்தப்பட அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

தலைப்பு செய்திகள்

100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget