மேலும் அறிய

Tasmac : பார்களை மூடணுமா? எங்களுக்கு உரிமை இருக்கு: உத்தரவுக்கு எதிராக டாஸ்மாக் மேல்முறையீடு

6 மாதத்திற்குள் மதுபான பார்களை மூட உத்தரவிட்டதை எதிர்த்து டாஸ்மாக் மேல்முறையீடு செய்துள்ளது.

மதுபான பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என நீதிபதி சரவணன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மது கடைகளின் அருகில் பார்களுக்கு உரிமை வழங்க, டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உண்டு என்று டாஸ்மாக் மேல்,முறையீடு செய்துள்ளது. 

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் 4 ம் தேதி டாஸ்மாக் கடைகளில் செயல்பட்டு வரும் பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி,

அந்தக் கடைகளில் இயங்கி வரும் பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019-2021ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க கோரி மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், "கொரோனா ஊரடங்கு காரணமாக பல நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்தன. இதனால் அவர்களுக்கு உரிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே எங்களுடைய உரிமம் காலத்தை நீட்டிக்க வேண்டும்" எனக்  கூறியிருந்தனர்.

Tasmac : பார்களை மூடணுமா? எங்களுக்கு உரிமை இருக்கு: உத்தரவுக்கு எதிராக டாஸ்மாக் மேல்முறையீடு

இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த பார் உரிமம் பெற்றவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசிற்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, வருமானம் வருகிறது என்பதற்காக அரசு டாஸ்மாக் கடைகள் பார்களை நடத்தக் கூடாது. மேலும் டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை எடுப்பதற்கு விடுக்கப்பட்ட டென்டர் மற்றும் ஸ்நாக்ஸ் விற்க விடுக்கப்பட்ட உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், "தமிழ்நாடு தடை சட்டம் 1937-ன்படி டாஸ்மாக் கடைகளுக்கு அங்கு விற்பனை செய்யும் மதுபானங்களை அந்த கடைகளுக்கு அருகே பார் அமைத்து பருக அனுமதி அளிக்க உரிமையில்லை. அத்துடன் அந்த பார்களில் ஸ்நாக்ஸ் விற்க மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை எடுக்க உரிமம் அளிக்கவும் அனுமதியில்லை. மேலும் இந்த பார்கள் அனைத்தும் தனியார்களுக்கு உரிமத்துடன் தரப்படுவதால் அதன் மீது டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆகவே இந்த பார்களை 6 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. 

அத்துடன் டாஸ்மாக் கடைகள் மதுபான விற்பனைக்கு மட்டுமே உரிமம் பெறுகின்றன. அந்த இடங்களில் மதுபானத்தை குடிக்க பார் அமைக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த பார்களில் மதுபானங்களை குடித்துவிட்டு பொது இடங்களில் மது குடிப்போர் செல்ல நேரிடும். ஆகவே இது பொதுமக்களுக்கு மிகவும் தொந்தரவு அளிக்கும் செயலாக மாறிவிடும். எனவே டாஸ்மாக் கடைகள் இந்த பார்களை உடனடியாக மூட வேண்டும். ஏற்கெனவே உரிமம் அளிக்கப்பட்ட பார்களை 6 மாதங்களுக்குள் நிச்சயம் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1937ஆம் ஆண்டு மெட்ராஸ் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. அதில் மதுபான குடிப்பவர்களால் சமூதாயத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை தடுக்க மது அருந்த தடை விதிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு மது குடிப்பதற்கு தடைவிதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மதுவிற்பனை மற்றும் தயாரிப்பு ஆகியவற்றிற்கு இந்தச் சட்டம் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
மக்களே அலர்ட் - இன்று முதல் ஜூன் 8 வரை தமிழ்நாட்டில் கொட்டப்போகும் கனமழை; எங்கெல்லாம் தெரியுமா?
மக்களே அலர்ட் - இன்று முதல் ஜூன் 8 வரை தமிழ்நாட்டில் கொட்டப்போகும் கனமழை; எங்கெல்லாம் தெரியுமா?
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Embed widget