Rain update: 14 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..! 5 நாட்களுக்கு குடையுடன் வெளியில போங்க..!
மேற்கு திசை மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![Rain update: 14 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..! 5 நாட்களுக்கு குடையுடன் வெளியில போங்க..! TamiNadu rains heavy rain likely to occur in 14 districts Rain update: 14 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..! 5 நாட்களுக்கு குடையுடன் வெளியில போங்க..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/25/2eee4b6362c72aed8226e8bf36894e671664090586072224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு திசை மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூட், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 25, 2022
இதுகுறித்து முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
24.09.2022 முதல் 26.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
27.09.2022 மற்றும் 28.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/YrSayIVBpq
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 25, 2022
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
25/09/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/1TxWrK3EKI
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 25, 2022
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:
தமிழ்நாட்டில் அரியலூர்,பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
24.09.2022: தென் தமிழககடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)