மேலும் அறிய

Rain: மக்களே அலர்ட்!.. இன்று இரவு 24 மாவட்டங்களில் மழை இருக்கு!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், தேனி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி,தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 24 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Also Read:வாட் ப்ரோ! பாஜகவில் நேற்று ஒரு ரூல், இன்று ஒரு ரூலா…ஆனால் நயினார் நாகேந்திரன் ஹேப்பி!

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி?

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்து நிலையில், ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலயில், அடுத்த 7 தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. 

நேற்றைய தினம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை அதே பகுதிகளில் வலுவிழந்தது.மேலும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து 13-04-2025 முதல் 17-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் 'காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை நிலவரம்:

தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை ( 11-04-2025 மற்றும் 12-04-2025 ) ஆகிய நாட்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் வரும் 15-04-2025 நாளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் 100 இடங்களுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டும், கரூர் பரமத்தியில் 101.3 ஃபாரன்ஹீட்டும், மதுரை நகரத்தில்101.48 பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்ட்டும், தஞ்சாவூரில்100.4 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சியில் 102.74 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில்102.38 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம். 

தலைப்பு செய்திகள்

Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
தவணை முறையில் காலி மனை !! ஏமாறாமல் இருக்க வல்லுநர்களின் வழிகாட்டுதல்
தவணை முறையில் காலி மனை !! ஏமாறாமல் இருக்க வல்லுநர்களின் வழிகாட்டுதல்
பளிச்சென மாறப்போகும் சாலைகள்.. ஆக்‌ஷன் எடுத்த முதல்வர் விஜய்.. இனிமேல் அதிரடி சரவெடி தான்!
பளிச்சென மாறப்போகும் சாலைகள்.. ஆக்‌ஷன் எடுத்த முதல்வர் விஜய்.. இனிமேல் அதிரடி சரவெடி தான்!
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget