மேலும் அறிய

வாட் ப்ரோ! பாஜகவில் நேற்று ஒரு ரூல், இன்று ஒரு ரூலா…ஆனால் நயினார் நாகேந்திரன் ஹேப்பி!

TN New BJP President Nainar Nagendran: தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்வு செய்வதற்காக , நேற்று சொன்ன விதிமுறையை, இன்று பாஜக மாற்றியுள்ளது பெரும் பேசு பொருளாகியுள்ளது.

தமிழ்நாடு மாநிலத்தின் பாஜக தலைவராக, எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தேர்வு உறுதியான நிலையில், அவருக்காக நேற்றைய வேட்புமனு அறிவிப்பில் வெளியான விதிகள் மாற்றப்பட்டதுதான், தற்போது பாஜக முடிவு குறித்து பேசுபொருளாக மாறியிருக்கிறது. அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டன.  தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணி ஆட்சிதான், ஆட்சி அமைக்க சாதகமான சூழல் இருப்பதாக பார்க்கப்படும் நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்ததையானது தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையானது தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அதிமுக-பாஜக கூட்டணியானது உறுதியாகிவிட்டது. அதை அதிகாரப்பூர்வமாக பாஜக தலைவர் அமித்ஷாவும், அதிமுகதலைவர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக தெரிவித்து விட்டனர். 

அதிமுக - பாஜக கூட்டணி:

திமுக கூட்டணியில், தற்போது இருக்கின்ற கூட்டணியே, 2026 தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணியில் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதிலும், அதிமுக – பாஜக கூட்டணி உருவாகுமா என்ற பேச்சானது, தமிழ்நாட்டு அரசியலில் , சமீப தினங்களாக  பெரிதும் பேசபட்டது. சில தினங்களுக்கு முன்பு, அதிமுக மூத்த தலைவர்களான இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி ,செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திப்பதுமான நிகழ்வும் நடந்தது. அப்போது, அண்ணாமலையை தமிழக பாஜக தலைமையில் இருந்து மாற்றினால்தான், பாஜகவுடன் கூட்டணி என இபிஎஸ் உறுதியாக தெரிவித்ததாக கூறப்பட்டது. இதையடுத்துதான், அதிமுகவுடனான கூட்டணிதான் முக்கியம் என்றும், அதன் காரணமாக அண்ணாமலையை மாற்ற பாஜக தலைமை முடிவெடுத்ததாகவும் தகவல் வெளியானது.

நேற்றைய பாஜகவின் விதிமுறை:

இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் குறித்தான அறிவிப்பும் வெளியானது. நேற்றைய தினம் பாஜக மாநில தலைவருக்கான, விருப்ப மனு பெறப்படுகிறது என்றும் அதற்கான விதிமுறைகளையும், தமிழ்நாடு பாஜக வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள்,  இன்று ( ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை மதியம் ) 02.00 மணி முதல் மாலை 4 மணி வரை  விருப்ப மனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியிட மனு தாக்கல் செய்ய உள்ளவர்கள், மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும் என விதிகளையும் மாநில தேர்தல் அதிகாரியான சக்ரவர்த்தி தெரிவித்தார்.


வாட் ப்ரோ! பாஜகவில் நேற்று ஒரு ரூல், இன்று ஒரு ரூலா…ஆனால் நயினார் நாகேந்திரன் ஹேப்பி!

மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்:

இந்நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், பாஜக கட்சியின் எம்.எல்.ஏ-வாக உள்ள நயினார் நாகேந்திரன் மட்டும் பாஜக மாநில தலைவருக்கான பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக பொறுப்பேற்கவுள்ளதும் உறுதியானது. ஆனால், பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அது என்னவென்றால், நேற்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு பாஜக மாநில தேர்தலுக்கான விதிமுறைகளில், குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நயினார் நாகேந்திரனோ, பாஜகவில் இணைந்து 9 ஆண்டுகள்தான் ஆகின்றன என தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எப்படி இவர் தேர்வு செய்யப்படுகிறார் என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தன. 

பாஜகவின் இன்றைய விதிமுறை:

இதையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவரை மாற்றம் செய்வற்காக, இன்று சில மணி துளிகளில் தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 9 ஆண்டுகள் மட்டும் பாஜகவில் இருப்பதாக கூறப்படும் நயினார் நாகேந்திரன், 10 ஆண்டுகளை நிறைவு செய்யாத போதிலும், தலைவர் பதவிக்கு தகுதி பெற்றிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆந்திரா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக மாநில தேர்தல்களில் மாற்றம் கொண்டுவரபட்டதாக தேர்தல் அதிகாரியான சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஒரு விதிமுறை, இன்று ஒரு விதிமுறை என கட்சியிலேயே, இப்படி மாற்றம் செய்யப்படுகிறதே என பலரும் பேசி வருவதை பார்க்க முடிகிறது.  மேலும், பாஜக கட்சியானது விதிகளின்படியெல்லாம் செயல்படாது என்றும், இவர்கள் செயல்பாடுதான் விதிகள் என்று செயல்படுவார்கள் என்றும் எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

யார் துரோகி?.. நம்பிக்கையை விற்ற நச்சுப்பாம்புகள்.. காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்!
யார் துரோகி?.. நம்பிக்கையை விற்ற நச்சுப்பாம்புகள்.. காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்!
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Embed widget