தமிழ்நாட்டில் பிப்.25 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் சொல்வது என்ன?
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் வெயில் நிலவி வரும் வரும் நாட்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான நாட்களில் , தமிழ்நாட்டில் மற்றும் புதுவை-காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: ”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், ஏனைய இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் நிலவியது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30-34 டிகிடி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
25-02-2025 முதல் 27-02-2025 வரை; அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
23-02-2025 மற்றும் 24-02-2025: தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ், இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
25-02-2025 முதல் 27-02-2025 வரை:அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (23-02-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (24-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை;
தமிழக கடலோர பகுதிகள்:
23-02-2025 எச்சரிக்கை ஏதுமில்லை.
24-02-2025 முதல் 27-02-2025 வரை; தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்;
23-02-2025 எச்சரிக்கை ஏதுமில்லை.
24-02-2025: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25-02-2025 மற்றும் 26-02-2025: தெற்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27-02-2025:தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: என்னுடைய இன்ஸ்டா அக்கவுண்ட்டை, ஒருநாள் பெண்களிடம் கொடுக்கிறேன்: பிரதமர் மோடி சொன்னது எதற்காக?