Tamilnadu Weather: மக்களே..! அடுத்த 2 நாட்களுக்கு கொளுத்தும் வெயில்.. வானிலை மையம் தெரிவித்தது என்ன.?
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![Tamilnadu Weather: மக்களே..! அடுத்த 2 நாட்களுக்கு கொளுத்தும் வெயில்.. வானிலை மையம் தெரிவித்தது என்ன.? Tamilnadu weather updates for next 2 days September 13,14 temperature rise and rain details Tamilnadu Weather: மக்களே..! அடுத்த 2 நாட்களுக்கு கொளுத்தும் வெயில்.. வானிலை மையம் தெரிவித்தது என்ன.?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/13/d22c9509e0f756e5fc2cbfdefac10b6b1726222377963572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் சமீப நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிவிப்பு:
தமிழ்நாட்டில் வானிலை நிலவரம் தொடர்பாக, வானிலை மையம் தெரிவித்துள்ள அறிவிப்பில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையானது ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவும் , இதனால் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் அப்டேட்:
இந்தியாவின் வானிலை, பருவநிலை முன்னறிவிப்பை மேம்படுத்த ரூ. 2,000 கோடி மதிப்பில் முக்கிய முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புவி அறிவியல் அமைச்சகம், புதுதில்லியில் உள்ள பிரித்வி பவனில் மிஷன் மௌசம் எனப்படும் வானிலை இயக்கம் குறித்த தேசிய அளவிலான பத்திரிகை விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மிருதுஞ்சய் மொஹாபத்ரா, நடுத்தர நிலை வானிலை முன்னறிவிப்பு தேசிய மையத்தின் தலைவர் டாக்டர் வி.எஸ்.பிரசாத் ஆகியோர் ஊடகங்களிடம் பேசினர்.
மிஷன் மவுசம்:
அவர் பேசியதாவது “ இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில், 2024 செப்டம்பர் 11 அன்று மத்திய அமைச்சரவை மிஷன் மவுசம் எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது மத்திய அரசின் லட்சிய முயற்சியாகும். இது இந்தியாவை வானிலை முன்னறிவிப்பில் நவீனமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணி நாட்டின் வானிலை, பருவநிலை முன்னறிவிப்பை வேகமாக மேம்படுத்தும் நடவடிக்கையாகும்.
முன்மொழியப்பட்ட வானிலை இயக்கத்தின் நோக்கங்கள் பின்வருமாறு:
- அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள், அமைப்புகளை உருவாக்குதல்
- சிறந்த தற்காலிக, இடஞ்சார்ந்த வளிமண்டல கணிப்புகளை செயல்படுத்துதல்
- ·அடுத்த தலைமுறை ரேடார்கள், மேம்பட்ட கருவி பேலோடுகளுடன் செயற்கைக்கோள்களை செயல்படுத்துதல்
- வானிலை, பருவநிலை செயல்முறைகள், முன்கணிப்பு திறன்களின் புரிதலை மேம்படுத்துதல்
- மேம்படுத்தப்பட்ட புவி அமைப்பு மாதிரிகள், தரவு முறைகள் ஆகியவற்றை உருவாக்குதல்
- வானிலை மேலாண்மைக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல்
- கடைசி மைல் இணைப்பிற்கான அதிநவீன பரவல் அமைப்பை உருவாக்குதல்
இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் வானிலை அறிவிப்பின் துல்லியத்தன்மை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: School Holiday: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை; என்ன காரணம்?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)