நாளை மறுநாள் உருவாகிறது புயல்: எங்கு கரையை கடக்கும்: பயணிக்கும் பாதை இதோ.!
Cyclone: வங்கக் கடலில் நாளை மறுநாள் புயல் உருவாக கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23-ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயல் நகரும் பாதை குறித்து வானிலைம் மையம் தெரிவித்துள்ளதை பார்ப்போம்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
உருவாகும் புயல்:
நேற்று (20-10-2024) வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை (21-10-2024) 05.30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதளை ஓட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 22-ஆம் தேதி காலை, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று. 23-ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 24 ஆம் தேதி காலை, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளை அடையக்கூடும்.
புயல் கரையை கடக்கும் பாதை:
தமிழ்நாட்டில் மழை:
இந்நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் சிவகங்கை, மதுரை திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், சேவடி நாமக்கல் திருச்சிராப்பள்ளி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
22.10.2024.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர், ஈரோடு, நீலகிரி கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23.10.2024
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.