TN Rain: அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழைதான்!..மக்களே முன்னெச்சரிக்கை!
TN Rain: இன்று இரவு 7 மணிவரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:
இந்நிலையில் இந்த 32 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்லுங்கள். மேலும் வெளியே செல்ல நினைப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லுங்கள்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 12, 2024
நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 32 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2 நாட்களுக்கு கனமழை:
மேலும் வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 12, 2024
நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக , உங்களது வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மீனவர்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையை பொறுத்தவரையில், ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Emergency: ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு