மேலும் அறிய

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இன்றைய வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

”தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  மாலத்தீவு  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவ கூடும். 

09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.12.2023 மற்றும் 11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

12.12.2023 முதல் 14.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 12, கோயம்புத்தூர் விமான நிலையம்  (கோயம்புத்தூர்) 11, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 10, மஞ்சளாறு (தேனி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), தேவாலா (நீலகிரி) தலா 9, சூலூர் (கோயம்புத்தூர்), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்) தலா 8, திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), வாடிப்பட்டி (மதுரை) தலா 7, வைகை அணை (தேனி), ஆண்டிபட்டி (தேனி) தலா 6.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

அரபிக்கடல் பகுதிகள்: 
09.12.2023 மற்றும் 10.12.2023:  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Embed widget