Weather Today: பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை - காரணங்களும் விளக்கங்களும் கூறும் தமிழ்நாடு வெதர்மேன்
தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
வங்ககடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றத்தழுத்தத் தாழ்வுபகுதி, தற்போது குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு மணடலாமாக வலுவடைந்துள்ளது. இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை. அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் மணிக்கு 60 கிலோமீட்டர் காற்று வீசும் என்றும் சென்ன்னை வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து பிரபல வானிலை நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் சென்னைக்கு 700 கிமீ தெற்கே தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இது நாளை வட கிழக்கு பகுதியில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் 3ம் தேதியிலிருந்தே மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், மேற்குதிசையிலிருந்து வரும் காற்றின் விசை காரணமாக இந்தத் தாழ்வுப்பகுதிமெல்ல நகர்கிறது. மேலும், 5-ம் தேதி காலை முதல் 7 ம் தேதிவரை தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம்.
வடகடலோர மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கரையைக் கடந்தபின், தென் மாவட்டங்களில் ஒரு இடங்களிலும், வட உள்மாவட்டங்களிலும் 8 மற்றும் 9 தேதிகளில் மழை இருக்கும். காற்று சராசரியாக மணிக்கு 30 முதல் 40கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். லேசான காற்றுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த மழையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.