TN Headlines: இன்றைய நாளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? ஒரு ரவுண்டப் உங்களுக்காக!
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
-
CM MK Stalin Letter: சிறைப்பிடித்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்..
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது ஐந்து மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (16-10-2023) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் படிக்க..
-
TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை;15 மாவட்டங்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க..
-
ISRO: தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த இஸ்ரோ தலைவர்.. காரணம் என்ன?
குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும், இரண்டு ஆண்டுகளில் குலசேகர பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் பணிகள் முடிவடையும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். மேலும் படிக்க..
-
Salem Airport: சேலம் விமான நிலையத்தில் 2 ஆண்டுக்கு பின் விமான சேவை; பயணிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூ ஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். மேலும் படிக்க..
-
Child Kidnap: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை.. 4 மணி நேரத்தில் மீட்டு அசத்திய போலீஸ்: எப்படி?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திச் சென்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பரபாஸ் மெண்டல் (44) மற்றும் நமீதா (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசா மாநிலம் காந்தம்மால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த நந்தினி கண்காகர் - லங்கேஸ்வர் ஆகியோர் தங்களது ஒரு வயது ஆண் குழந்தையுடன் நேற்றிரவு ஒரிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அங்கேயே அந்த தம்பதியினர் தூங்கி உள்ளனர். இந்த நிலையில் திடீரென ஒரு மணி அளவில் எழுந்து பார்க்க ஆண் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. மேலும் படிக்க..