மேலும் அறிய

TN Headlines: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? இதுதான் லேட்டஸ்ட் அப்டேட்!

TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் ரத்தம் சிந்திய பக்தர்! உடனடியாக சாத்தப்பட்ட நடை!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து 2.50 லட்சம் பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 2,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாசிக்க..

மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை

மிக்ஜாம் புயல் பேரிடரில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 3429 தூய்மை பணியாளர்களுக்கு தலா 4000 ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதற்காக ரூ. 1,37,16,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட கடலோர தமிழகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் 40 செ.மீ மழை பதிவானது. மேலும் வாசிக்க..

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசுதான் செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்கு சாவடி முகவர் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காஷ்மீர் மாநிலத்தை 370வது அரசியல் திருத்த நீக்கத்தை பற்றியும் அம்மாநிலத்தை மூன்றாகப் பிரித்து சிறு, சிறு துண்டுகளாக பிரித்தது பற்றியும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். மேலும் வாசிக்க,

எண்ணூர் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிறுவனம்தான் காரணம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு மிதந்து வருகிறது. அப்பகுதியில் இருக்கும் மீன்வர்களின் படகுகளில் கரிய பிசின் போல் இந்த எண்ணெய் ஒட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க..

இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அமைக்க வேண்டும் -நயினார் நாகேந்திரன்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 141 வது பிறந்த தின விழாவையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியில அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பாரதியார் சிலைக்கு மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இயற்கை சீற்றத்தை அரசியல் ஆக்க கூடாது என அமைச்சர்கள் கூறியுள்ளனர். எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மழை பாதிப்பை அரசு கவன குறைவாக கையாண்டுள்ளனர். தமிழக அரசு ரூ.6000 கொடுப்பதாக கூறியுள்ளது. அது போதாது ரூ.12000 கொடுக்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. டெல்லியில் இருக்கக்கூடிய பாராளுமன்ற குழு பேசி முடிவு எடுப்பார்கள். மேலும் வாசிக்க..

இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல்  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 18 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் வாசிக்க..


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget