TN Weather: என்னது, தமிழ்நாட்டில் மீண்டும் கனமழையா.! 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் வரும் மார்ச் 11 ஆம் தேதி கன்னியாகுமரி , திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், வானிலையில் சற்று மாற்றம் ஏற்படுகிறது என்றும், இதனால் வரும் மார்ச் 11 ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களில் வானிலை எப்படி இருக்கும் , எந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்தும் பார்ப்போம்.
அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
- 07-03-2025 மற்றும் 08-03-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
- 09-03-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- 10-03-2025.
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- 11-03-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
- 12-03-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 13-03-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read: எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்புவது எப்போது?
வெப்பநிலை எப்படி இருக்கும்?
அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2.4 செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலையானது, ஈரோட்டில் 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏனைய இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39 டிகிரி செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 7, 2025
மேலும், 07-03-2025 முதல் 09-03-2025 வரை; அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

