மேலும் அறிய

Tamilnadu Health department: அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசிய அண்ணாமலை.. அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்த தமிழக அரசு..!

கா்ப்பிணிகளுக்கு ஹெல்த் கிட் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மருத்துவ சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கா்ப்பிணிகளுக்கு ஹெல்த் கிட் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மருத்துவ சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், “ அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகத் திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் அரசாணை: 118 குடும்பநலத் துறை (P2) தேதி 02.04.2018 மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12.06.2018 தேதியிட்ட இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை அவர்தம் கடிதத்தில் ஒவ்வொரு பெட்டகமும் ரூ.2000/- மதிப்பில் 8 வகையான பொருட்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொன்றின் தரம் குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் இரும்புச் சத்து மற்றம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிரப்பும் ஒன்றாகும்.

இதன் சரிவிகித கலவை 2018 ஆம் ஆண்டிலேயே ஊட்டச்சத்து நிபுணர்களை கொண்டு கலந்து ஆலோசித்து தெரிவிக்கப்பட்ட கலவை ஆகும்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான பிரத்தியோகமான கலவை பின்வருமாறு

மேற்கண்ட இரும்பு சத்து சிரப்பானது 200 மி.லி பாட்டில் ரூபாய். 74.65/- என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு பாட்டில் ஒன்று ரூபாய். 112/- ஆகும். எனவே ஒரு பாட்டிலில் ரூபாய். 37.35/- அரசுக்கு மிச்சம் ஆகின்றது. மேலும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் அடிப்படை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் (EDL) உள்ள இரும்பு சிரப் என்பது 100ml கொண்ட பாட்டில். இதன் பயன்பாடு இரும்புச் சத்து குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கானது.

அதில் உள்ள சத்துக்கள்:

Elemental Iron 20me

Folc Acid 100mog

உண்மைக்கு புறம்பானது 

எனவே மேற்கண்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் இரண்டு இரும்புச் சத்து சிரப்புகளும் வெவ்வேறு பயன்பாட்டிற்கானது மற்றும் வெவ்வேறு கலவைகளை கொண்டது. எனவே இதன் ஒப்பிடு என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது.

2. ஆவின் வழங்கும் டயரி ஓயிட்னர் பதிலாக  தனியாரின் Pro-PL பவுடரை வாங்கயிருப்பதாகவும், அதனால் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

பதில்

அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகத் திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் அரசாணை: 110 குடும்பநலத் துறை (P2) தேதி 02.04.2018 மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12.06.2018 தேதியிட்ட இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் தோய்த் தடுப்புத்துறை அவர்தம் கடிதத்தில் ஒவ்வொரு பெட்டகமும் ரூ.2000/- மதிப்பில் வகையான பொருட்களை 8 உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொன்றின் தரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 

விவரம் 

Mothars Health Mix என்னும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பவுடர் வகையும் ஒன்றாகும். அதில் உள்ள கலவையானது ஊட்டச்சத்து நிபுணர்களை கொண்டு வந்து ஆலோசித்து தெரிவிக்கப்பட்ட கலவை ஆகும். மேலும் உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கிகரிக்கப்பட்ட சரிவிகித  ஊட்டச்சத்து கலவை ஆகும். இதன் கொள்முதல் விலை 500 கிராம் ரூபாய் 400.50 இதல் சந்தை விலை ரூபாய் 588. எனவே ஒரு பாட்டிலில் ரூபாய் 127.50 அரசுக்கு மிச்சம் ஆகின்றது. 

மேலும் ஆவினில் உள்ள டயிரி ஓயிட்னர் எனும் பால் பவுடர் இத்தகைய ஊட்டச்சத்து கலவைகளை கொண்டது மேலும் 08.04.2022 தேதியிட்ட கடிதத்தில் ஆவினால் தயாரிக்கப்படும் பவுடர் குறித்த ஆய்வு மற்றும் சாத்திய கூறுகளுக்கான முடிவு எட்டப்படாத நிலையில் சென்ற வருடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட அதே Mother Health Mix கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது எனவே ஆவினால்

தயாரிக்கப்படும் heathmix தவிர்க்கப்பட்டு தனியாரின் Pro-PL Health Mix அதிக விலைக்கு வாங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறனாது. மற்றும் அடிப்படை ஆதாரமற்றது.

அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகத் திட்டம் 2018 ஆம் ஆண்டு முதலே உரிய அரசாணைகள் மூகம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் ஆகும். கடந்த காலங்களில் கமர் 17.5 இலட்சம் பெட்டகங்கும் கொள்முதல் செய்யப்பட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு உரிய காலங்களிக் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறாக வழங்கப்பட்ட பெட்டகங்களில் எங்வித குறைப்பாடும் இன்றனவும் தெரிவிக்கப்படாத காரணத்தினால் அதன் கூறுகளான இரும்புச் சத்து சிரப்பு மற்றும் Mother Health ஆகியவைகளின் கலவைகளில் எவ்வித மாற்றமும் கோரப்படவில்லை.

மேலும் வரும் வருங்களுக்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டு, டெண்டர் வழங்கிய கம்பெனிகளின் தரவுகள் சரிபார்ப்பு பணி மட்டுமே முடிவடைந்துள்ளது. மேலும் பொருட்களின் தரம் மற்றும் தரவு சரிபார்ப் முடிவடையாத நிலையில் ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு கொள்முதக் ஆணைகள் ரூபாய். 450 கோடிக்கு வழங்கப்பட்டது என்னும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் அரசின் நற்பெயர்க்கு களங்கம், கற்ப்பிக்கும் வகையில் உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Embed widget